ஞாயிறு, 18 டிசம்பர், 2011

ஈவ்டீசிங்..பாலத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி


மார்த்தாண்டம் அருகே சூசைபுரம் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்பி. இவரது மகள் அனுஷா (15). அந்த பகுதி பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்குச் சென்ற அனுஷா சீருடையுடன் குழித்துறை ஆற்றுப் பாலத்தில் இருந்து 60 அடிபள்ளத்தில் குதித்தார். இதைப்பார்த்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அனுஷாவை மீட்டனர். பின்னர் அவரை சிகிச் சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனுஷா தற்கொலைக்கு முயற்சித்தது ஏன்? என விசாரித்தனர்.
விசாரணையில் வாலிபர் ஒருவர், அனுஷாவின் படத்தை அவரது படத்தோடு கிராபிக்ஸ் மூலம் இணைத்து மிரட்டியதாக தெரிகிறது.

 மேலும் அந்த கிராபிக்ஸ் படத்தை அனுஷாவின் வீட்டின் அருகில் வீசி உள்ளார். இதை அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்து உள்ளனர். இதனால் மனம் உடைந்த அனுஷா தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரிய வந்துள்ளது.

அனுஷாவுடன் புகைப்படத்தில் இருக்கும் அந்த வாலிபரை பிடிக்க போலீசார் அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால் அந்த வாலிபர் தலைமறைவாகி விட்டார். அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து போலீசார் கேரளா விரைந்து உள்ளனர். தற்கொலைக்கு முயன்ற அனுஷா இன்னும் முழுமையான சுயநிலைக்கு திரும்ப வில்லை. சுய நிலைக்கு திரும்பிய பிறகு தான் முழு விவரங்கள் தெரியவரும்.

கருத்துகள் இல்லை: