சனி, 27 ஆகஸ்ட், 2011

Noel Nadesan:ஈழப்போராட்டம என்ற பெயரில் பிரபாகரன்ஆடிய கூத்தை பார்தது

அன்பின் நண்பர் கிரிதரன் அவர்கட்கு,

நீங்கள் முதலாவது பந்தியில் கூறிய விடயங்கள் எதுவும் எனக்குப் புதிது அல்ல. இலங்கையின் இனமுரண்பாட்டு வரலாறு எனக்குத் தெரிந்தவிடயம். அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் அகதிகள் கழகத்தை ஆரப்பித்து அதை நடத்தியவர்களில் நானும் ஒருவன். அகதி விண்ணப்பத்தை நிரப்ப பலருக்கு நான் உதவி செய்தது மட்டுமல்ல, பத்துக்கும் மேற்பட்வர்களுக்கு எக்ஸ்பேட் விற்னசாகவும் சென்றிருக்கிறேன். அவுஸ்திரேலிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் பிரதமர், மற்றும் அமைச்சர்களிடம் பலதடவைகள் இலங்கையின் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை எடுத்துரைத்திருக்கிறேன். மேலும் எனது வண்ணாத்திக்குளம், உனையே மயல் கொண்டு ஆகிய இரண்டு நாவல்களும் இலங்கை அரசியல் விளைவுகளை பின்னணியாக எழுதப்பட்டவை என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை 83 கலவரத்துக்குப் பின்னர் பெரும்பாலான தமிழர்கள் வெளிநாடு செல்ல முயற்சித்தபோது நான் எனது மனைவியோடு இந்தியா சென்று அங்கிருந்த ஈழத்தமிழ் அகதிகளுக்கும் பல இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மருத்துவ உதவிகள் செய்ததோடு சகல இயக்கங்கங்களையும் மற்றும் எனக்குத்தெரிந்தவர்களையும் ஒன்றாக இணைத்து தமிழர் மருத்துவ நிதியத்தை ஆரம்பித்து நடத்திய போது நடந்த சகோதர யுத்தத்தையும் இந்தியப் படைகள் இலங்கைக்கு சென்றதையும் பார்த்துவிட்டு, ஈக்கு கொல்லன் பட்டறையில் என்ன வேலை என்ற தீர்மானத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு வந்தேன். கனடாவில் தற்போது வசிக்கும் பழைய இயக்கத்தினரிடம் எனது கதையை உறுதி செய்யலாம்.

கருத்துகள் இல்லை: