செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

கிறிஸ் பேய் பிரச்சினைகளை தடுக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் விசேட குழுக்கள்?.


கிறிஸ் பேய் பதற்றத்தை தணிப்பதற்காக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நாட்டின் சகல பாகங்களிலம் விசேட குழக்கள் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த விசேட குழு நிறுவப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும், காவல்துறையினருடன் இணைந்து கிறிஸ் பேய் அச்சுறுத்தல்களை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கூட்டத்தில் வலியுளுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் அரசாங்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் சில குழுக்கள் கிறிஸ் பேய பதற்றத்தை நாட்டில் ஏற்படுத்தி வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மக்களின் ஆதரவு கிட்டாத ஓரு சில குழக்களே இந்த நாச வேலையில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ் பேய் பற்றி நிலைமைகளை மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீமினால் இந்த விசேட குழு அமைக்கும் யோசனைத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: