திங்கள், 22 ஆகஸ்ட், 2011

புலம்பெயர் பிரசாரங்களை முன்னெடுக்கும் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

தாய்நாட்டுக்கு எதிரான பொய் பிரசாரங்களை முறியடிப்பது தொடர்பாக ஆலோசனை:ஐரோப்பாவிலும் அவுஸ்திரேலியாவிலும் வசிக்கும் இலங்கையர்களின் குழுவொன்று அலரி மாளிகையில் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

ஐரோப்பாவிலும் அவுஸ்திரேலியாவிலும் வசிக்கும் இலங்கையர்களின் குழுவொன்று நேற்று முன்தினம் (20) காலை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தது.

இலங்கை தொடர்பாக சர்வதேச ரீதியில் இடம்பெறும் தப்பபிப்பிராயங்களை போக்குவதற்கு எடுக்கக் கூடிய நடைமுறைகள் தொடர்பாக கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் பிரதான நோக்கமாக இரு ந்தது. வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை யர்கள் தாய்நாட்டின் கெளரவத்தை மேம்படுத்தவும் இலங்கை தொடர்பான சரியான தகவல்களை வெளிநாட்டினருக்கு வழங்குவதற்கும் எடுக்கும் முயற்சிகளை ஜனாதிபதி பாராட்டினார்.

இலங்கைக்கு எதிராக செயற்படும் புலிகள் பிரசாரத்துக்கு உரியவகையில் பதிலளிப்பதற்கு சரியானவொரு வேலைத்திட்டம் அவசியமாவதாக இங்கு ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்த திட்டத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பங்கு முக்கியமானது என்றும் ஜனாதிபதி கூறுனார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்கு துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை: