செவ்வாய், 21 செப்டம்பர், 2010

காங்கிரஸ என்றும் பேரவை என்றும் இன்னும் புதுப் புதுப் பெயர்களில்

அகதிகள் குறித்த சட்டதிட்டங்களைக் கடுமையாக்க கனேடிய அரசு உத்தேசம்
(சாகரன்)
இலங்கை அகதிகள் தொடர்பான சட்டதிட்டங்களைக் கடுமையாக்க கனேடிய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலிய குடிவரவுக் கொள்கையைக் கனடாவும் பின்பற்றுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் தொடர்பில், அவுஸ்திரேலிய கடுமையான கொள்கையை கடைபிடித்து வருவதால் அங்கு அகதிகள் வருகை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் சன் சீ கப்பல், தனது ஆஸி. பயணத்தை ரத்து செய்து, கனடாவுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. எனவே ஆஸியின் கொள்கையைக் கனடாவும் கடைப்பிடிக்க உத்தேசித்துள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது அங்கு வந்துள்ள 492 இலங்கை அகதிகளையடுத்து, மேலும் பலர் வரவிருப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து கனடா, மேற்படி கொள்கையைக் கடைபிடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னி, இது தொடர்பான ஆலோசனைகளைப் பெறும்பொருட்டு அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது. ஜேசன் கென்னி இன்று ஆஸி.குடிவரத்துறை அமைச்சர் கிரிஷ் ப்ரௌனை சந்தித்து, இலங்கை அதிகள் தொடர்பில் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பேசவுள்ளதாக அத்தகவலில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இது எதிர்பார்க்கப்பட் செய்திதான். இந்நிலமை ஏற்படுவதற்கு புலிப்பினாமிகளின் செயற்பாடே முக்கிய காரணமாக அமைகின்றது. புலிகளின் கப்பல்கள் பறிமுதல் செய்யப்படும் எப்பது மே 18 இற்கு பிந்தய நிலமைகள். இது புலிகளின்சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு தெரியும் பறிமுதல் செய்வதற்கு முதல்அதனைப் பயன்படுத்தி ஆள்கடத்தல்களில் ஈடபட்டு பெரும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதே இவர்களின் விருப்பம். கடத்தப்படும் ஆட்களை வைத்து தமதுகுறும் தேசியவாதத்தினால் புலம் பெயர்நாடுகளில் பண வசூலில் இறங்கி பணம்பண்ண வேண்டும் என்பது புலம் பெயர் புலிப்பினாமி அமைப்பாளர்களின்விருப்பு. இரண்டும் பொருந்திவரும் போது இருவர்களும் ஒருவருக்கு ஒருவர்உதவியாக செயற்பட  ுpர்மானித்தனர். இதில் சில Nசி ஒருமைப்பாட்டிற்குள் வந்த விடயங்களும் பேசாமல் ஒருமைப்பாட்டிற்குள் வந்த விடயங்களும் அடங்கும். கனடா போன்ற நாடுகளில் அகதி அந்தஸ்து கோரும் யாபேருக்கும் விசாரணைகள்முடியும் வரை இருப்பிடம் உணவு மருத்துவ வசதி, சட்ட ஆலோசனை போன்றசகலதும் இனாமாக அவ் அவ் நாட்டு அரசுகளினால் போதியளவுவழங்கப்படுகின்ற. இலங்கையில் உள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினர்அனுபவிபதைப் போல். அப்படி இருக்க இவ் அகதிகளுக்கு ஒதவ நிதி சேகரிகப்படுகின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவற்றை விட இவ்அகதி நிலை கோரும் தமிழ் மக்களின் நெருங்கிய ஒறவினர்கள் ஏற்கவே இவர்களின்வரவை எதிர்பார்த்து தங்குமிடங்களை ஏற்கனவே ஏற்பாடுகள் செய்திருக்கின்றநிலமைகள் நிறையவே உள்ள. இவையெல்லாம் இருந்தும் காங்கிரஸ என்றும்பேரவை என்றும் இன்னும் புதுப் புதுப் பெயர்களில் பல அமைப்புகள் சாசுவேர்க்கின்றனர். வன்pயில் வாடும் மக்களை மற்நது பல காலம் ஆகிவிட்டது பாலசிங்கத்தையும் தேசியத் தலைவரையும் மறந்ததைப் போல்.
அவுஸ்திரேலியா முதலில் போருக்கு பின் பெரு அளவில் கம்பலில் சென்ற தமிழ் முதலில் அகதிகளை ஏற்றது உண்மைதான். இவ் அகதிகள் புறப்படும் தூரக் கிழக்கு நாடுகள் கனடாவுடன் ஒப்பிடுகையில் அவுஸ்திரேலியா அண்மையில் உள்ள ன. மற்றையது இலங்கையை ஒட்டிய கால நிலை அவுஸ்திரேலியாவில் உள்ளது. வேறு இன்னும் சில காரணங்கள். இவ் வேளையில் தான் ஆஸ்திரேலியா தேர்தல் சூடு பிடிக்க அகதிகள் பிரச்சனையை வைத்து அரசியல் நடத்த கட்சிகள் முற்பட்டன.  இதனாவே தனது தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்த அவுஸ்திரேலிய அரசுஇனவாதத்தைவேறு வழியில் காட்டும் செயற்பாடாக அகதிகள் விடயத்தில் கடுமையாக நடக்க முடிவெடுத்தது.
அமெரிக்காவின் சிந்தனைகளை செயல்வடிவம் கொடுக்க அவுஸ்திரேலியாவிற்கு தேர்தல் நேரத்தில் ஒத்து வராது என்பதை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா அகதிக் கப்பல்களை தனக்கு அருகில் உள்ள கனடாவிற்குள் தனத  (சொ)ல்வாக்கு  கடற் பிராந்தியங்கள் ஊடாக அனுமதித்தது. (அண்டத்தையே சதா கண்காணிக்கும் அமெரிக்காவிற்கு இக்கப்பல் தூரக்கிழக்கிலிருந்து புறப்பட்டு மாதக்கணக்கில் பயணிப்பது தெரியாது என்றால் நம்ம நாம் என்ன கேணப் பயல்களா?) அகதிகள், போர்க் குற்றம், மனித உரிமை மீறல், என்று பன்முனைத் தாக்குதல் மூலம் இலங்கையை தனது வழியிற்குள் கொண்டு வர ஏவப்பட்ட பாணங்கள் இவை. இதில் சிறிதளவு வெற்றியையும் அமெரிக்கா கண்டுள்ளது என்பத  என்னவோ உண்மைதான். இதன் வெளிப்பாடுதான் அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு இலங்கை அதிகம் சாடாத அதே வேளை உதவிகளை வழங்குவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கழக அதிகாரியின் அறிவித்தலும் செயற்பாடுகளும் அமைந்திருந்தன.
அமெரிக்காவின் இந்த நிலைப்பாடும் ஒரு முக்கிய காரணம் இலங்கை அகதிகள் விடயத்தில் கனடிய அரசு கடும் கோட்பாட்டை கடைப்பிடிப்பதாக அறிவித்திருப்பதன் சூட்சமம்.
ஆக தற்போதும் இலங்கை அரசிற்கு சாதகமான வெற்றி நிலமைகளே ஏற்பட்டிருக்கின்றன. வியாபாரப் புத்தியுடன் நடக்கு குறும் தமிழ் தேசிய வாதமும், அமெரிக்காவை சீனா, இந்தியா, ஈரான், ரஷ்யா போன்ற நாடுகளுடன் இறுக்கமான உறவுகளை மேற்கொண்டும் அமெரிக்காவை கட்டுகுள் கொண்டு வந்ததில் இலங்கை அரசு வெற்றி பெற்றுள்ளது என்றே பார்க்க வேண்டும்.
எவை எப்படி இருப்பினும் இனி வரும் காலங்களில் உலகெங்கும் இலங்கை தமிழ் அகதிகள் அனுதாபத்துடன் நோக்கும் நலமைகள் குறைந்து கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. இந்த நிலமை ஏற்பட்டதற்கான பெருமையை புலிகளுக்கு வால்பிடித்து பெரும் பொருள் சம்பாதித்த புலப் பினாமிகளையே சாரும். கூடவே இலங்கை அரசின் இராஜதந்திர நகர்வுகளும் இவ் நலமைகளை உருக்வாக்குவதில் பெரும் வெற்றிகளை கண்டுள்ளதையும் மறுக்க முடியாது.
(ஆக்கம்; செய்திகளின் அடிப்படையில்: சாகரன்)

கருத்துகள் இல்லை: