வியாழன், 23 செப்டம்பர், 2010

TMS, செளராஷ்டிரர்களின் முதல் டெலிபிலிம்-வெளியிட்டார் டிஎம்எஸ்

மதுரை: செளராஷ்டிர மொழியில் உருவாக்கப்பட்டுள்ள முதல் டெலிபிலிமான கெட்டிவிடொ (நிச்சயதார்த்தம்) மதுரையில் வெளியிடப்பட்டது. இதனை பின்னணிப் பாடகர் டிஎம் செளந்தரராஜன் ரிலீஸ் செய்தார்.

இது குறித்து பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் நற்பணி மன்றத் தலைவர் எம்.பி.பாலன், கெட்டிவிடொ இயக்குநர் கணேஷ், நற்பணி மன்ற ஆலோசகர் மற்றும் முன்னாள் எம்பி ஏ.ஜி.எஸ்.ராம்பாபு, நாயகி கல்வி சேவா சங்கத் தலைவர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் ஆகியோர் கூறுகையில்,

இந்த படம் பலபேர் அளித்த நன்கொடையை வைத்து ரூ.15 லட்சம் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வைக் களைவது, ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை வாழ்வது, வரதட்சிணை ஒழிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இதில் பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் 3 பாடல்களும், அவரது மகன் டி.எம்.எஸ்.செல்வக்குமார் 2 பாடல்களும் பாடியிருக்கின்றனர். மொழியின் அடிப்படையில் சிறுபான்மையினராக இருக்கும் சமுதாயத்தினரை ஊக்குவிக்க இப்படத்திற்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும்.

தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் திரைப்படத் துறையினரை ஊக்குவித்து வருகிறார். அதே போன்று இது போன்ற சமூக நலப் படங்களைத் தயாரிக்க அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று மனு கொடுக்கவிருக்கிறோம் என்று அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை: