வெள்ளி, 24 செப்டம்பர், 2010

ஐஸ் வைக்கும் ஒபாமா:இந்தியா வருகை எதிரொலி-பல கூடை ஐஸ்

இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கு உலை வைக்கும் வகையில், அமெரிக்காவில் ஏகப்பட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கும் அதிபர் பராக் ஒபாமா, இந்தியா வருகையையொட்டி இந்தியா மாதிரி வருமா என்று புகழாரம் சூட்டி ஐஸ் வைத்துள்ளார்.

அதிபரான பின்னர் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகிறார் ஒபாமா. இந்த நிலையில், ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நியூயார்க் சென்றுள்ளார். அங்கு அவர் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகத்தில் ஒபாமாவை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து கிருஷ்ணா கூறுகையில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தான் நவம்பரில் இந்தியா வர மிகவும் ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார் என்றார்.

இதற்கிடையே, ஐ.நா. கூட்டத்தில் பேசிய ஒபாமா இந்தியாவை வெகுவாகப் புகழ்ந்து பேசி ஐஸ் வைத்தார்.

ஒபாமா பேசுகையில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடானா இந்தியாவில், ஜனநாயகம் மேலும் தழைத்தோங்கி வளர்ந்து வருகிறது. காலணி ஆதிக்கத்திலிருந்து மீண்டு சிறப்பான நிலையை நோக்கி வந்துள்ளது இந்தியா.

அமைதியான முறையில் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிய இந்தியாவுக்கு செல்வதில் பெருமைப்படுகிறேன். பல கோடி மக்கள், பல இன மக்கள் குழுக்கள் இணைந்து வாழும் இந்தியாவுக்கு விஜயம் செய்வது பெருமையாக இருக்கிறது என்றார் ஒபாமா.

தொடர்ந்து பேசிய ஒபாமா, இந்தோனேசியாவையும், அதன் ஜனநாயகத்தையும் வெகுவாகப் பாராட்டினார்.

அதேபோல நான் இந்தோனேசியாவுக்கும் செல்லவுள்ளேன். உலகிலேயே மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியா, மிகச் சிறந்த ஜனநாயக நாடாகவும் திகழ்கிறது என்றார்.

அமெரிக்க வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே போக வேண்டும். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் அவுட்சோர்சிங் வாய்ப்புகளை அளிக்கக் கூடாது, அப்படி அளித்தால், வரிச் சலுகைகள் ரத்து என்பது உள்பட பல்வேறு கெடுபிடிகளை அமெரிக்க அரசு கடைப்பிடித்து வருகிறது. சமீபத்தில் விசா நடைமுறையிலும் இந்தியர்களுக்கு ஆப்பு வைக்க இறங்கியுள்ளது.

இந்தியர்களும், சீனர்களும் நம்மை முந்தப் பார்க்கிறார்கள். எனவே அவர்களை வீழ்த்தும் வகையில் அமெரிக்கர்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்றும் ஒபாமா அடிக்கடி பேசி வருகிறார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு வரப் போவதையொட்டி இந்தியாவைப் போல ஒரு நாடு உண்டா என்று பேசி ஐஸ் வைத்துள்ளார் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்தவர்: நம்ப முடியலையே
பதிவு செய்தது: 24 Sep 2010 6:56 pm
உலகிலேயே மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியா மிகச் சிறந்த ஜனநாயக நாடாகவும் திகழ்கிறது என்றார். சன்னி சீயா சூப்பி அஹமாதி என்று பிரச்சினை எது வரவில்லையா ? இந்தோனேசியா தீவிரவாதம் என்று கூகுல் செய்து பார்கிறேன்

பதிவு செய்தவர்: MAS
பதிவு செய்தது: 24 Sep 2010 6:06 pm
Can any one Compare '' OBAMA and OSAMA''?
பதிவு செய்தவர்: Raj
பதிவு செய்தது: 24 Sep 2010 7:41 pm
Osama - CIA Agent Obama - Israel Agent

பதிவு செய்தவர்: குத்து
பதிவு செய்தது: 24 Sep 2010 5:59 pm
இந்தியாவில் இருப்பது ஜனநாயகம்னா .... அப்ப ஜனநாயகத்திற்கு பெயரை மாற்றி விட்டார்களா ....

பதிவு செய்தவர்: உலகத்தமிழினம்
பதிவு செய்தது: 24 Sep 2010 5:25 pm
இந்தியகுடிமக்களைக் கொன்றுகுவிக்கும் சிங்களகடற்படையை கண்டித்த சீமானை சிறையில் தள்ளியதும் ஜனநாயகமா? ஒபாமா நீயும் கருணாநிதியிடம் துட்டு ஏதும் வேண்டிவிட்டாயா?

பதிவு செய்தவர்: மார்கண்டேயன்
பதிவு செய்தது: 24 Sep 2010 5:01 pm
ஜன நாயகம் என்பது தேர்தலில் மட்டும் அல்ல அந்த நாட்டின் ஒவ்வொரு அசைவிலும் இருக்க வேண்டும், இங்கு தான் ஒரு விளையாட்டு போட்டிய கூட நடத்த வக்கு இல்லை, இவனுங்க ஜன நாயக சக்தி, து

பதிவு செய்தவர்: மந்திர்
பதிவு செய்தது: 24 Sep 2010 4:30 pm
எப்படியோ மீண்டும் எங்களை அ.டி.மை நாடாக எங்கள் தலைவர்கள் மூலம் மாற்ற பார்கிறீர்கள். என்ன முன்று பிரிடிஷ்காரனிடம் இப்போ அமெரிக்க காரனிடம். பொருளாதாரம் தொழில்நுட்பம் என்ற போர்வையில் மாட்டிகொண்டோமோ என்று தெரிகிறது.

பதிவு செய்தவர்: மல்லைய
பதிவு செய்தது: 24 Sep 2010 4:29 pm
எப்படியோ மீண்டும் எங்களை அடிமை நாடாக எங்கள் தலைவர்கள் மூலம் மாற்ற பார்கிறீர்கள். என்ன முன்று பிரிடிஷ்காரனிடம் இப்போ அமெரிக்க காரனிடம். பொருளாதாரம் தொழில்நுட்பம் என்ற போர்வையில் மாட்டிகொண்டோமோ என்று தெரிகிறது.

பதிவு செய்தவர்: புலம்
பதிவு செய்தது: 24 Sep 2010 4:27 pm
கிழிந்தது போ.

பதிவு செய்தவர்: என்னடா மீடியா இது
பதிவு செய்தது: 24 Sep 2010 4:20 pm
அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் பொருளாதார குறைவினால் ஆயிரக்கணக்கான பெரும் கம்பெனிகள், வங்கிகள், மூடப்பட்டன, இப்போது ஆள் குறைப்பு செய்கிறது அமெரிக்க அரசு. இதையும் கூட அரசியலாக்க வேண்டுமா?
பதிவு செய்தவர்: அதானே
பதிவு செய்தது: 24 Sep 2010 4:28 pm
இந்தியாவ முந்தணும் சீனாவ முந்தணும்னு ஆட்களை குறைப்பதற்கு கவுரமா சொல்றார் ஒபாமா. ஒரு வேலை இந்தியாவில் கடன் கேட்க வர்றாரோ?

பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 24 Sep 2010 4:14 pm
எங்கள வச்சி காமெடி கிமடி பண்ணலேய ???

கருத்துகள் இல்லை: