வெள்ளி, 24 செப்டம்பர், 2010

TNA picnics. இன்றுவரை தமது தொகுதிக்கு விஜயம் மேற்கொள்ளாத சம்பந்தன்

பிரபாகரனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட புலிக்கூட்டமைப்பினர் பிரபாகரனின் கட்டளைகளை தலைமேல் சுமந்தநிலையில் இடம்பெற்ற இரு பாராளுமன்றத் தேர்தல்களில் 2001ம் ஆண்டு முதல் 08.04.2010 வரை 15, 24 உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை தமதாக்கிக்கொண்டு தமக்கான வசதி வாய்ப்புக்கள் அனைத்தினையும்
இலங்கை மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் வழமான வாழ்க்கையை தமதாக்கினர். பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 14 ஆசனங்களைக் கைப்பற்றியவர்கள் இன்று ஆட்சியிலமர்ந்துள்ள அரசாங்கத்தின் செல்லாக்காசுகளாக செயலற்று ஆளுக்கொரு அறிக்கையும், பிரதேசத்திற்கொரு தலைவருமாக பின்னிப் பிணைகின்றனர்.
இந்நிலையில் புலிக்கூட்டமைப்பினதிருமலை மாவட்ட எம். பி. இரா. சம்பந்தன் மூன்று மாத காலத்திற்கு சபைக்கு சமுகமளிக்காதிருப்பதற்கான விடுமுறை பிரேரணைக்கு பாராளும ன்றம் நேற்று அங்கீகாரம் வழங்கியது. தமிழரசுக் கட்சியின் பாராளு மன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன் சபாநாயகரின் அனுமதியைப் பெற்று இப்பிரேரணையை சபைக்குக் கொண்டு வந்தார். இச்சமயமே பாராளுமன்றம் இப்பிரேரணைக்கு அனுமதி வழங்கியது.
பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் தமிழகத்திற்குசென்ற சம்பந்தன் இன்றுவரை தமது தொகுதிக்கு விஜயம் மேற்கொள்ளாத நிலையிலேயே தொடர்ந்தும் ஓய்வெடுப்பதற்காக தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்
பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து சுமந்தி ரன் எம். பி. இப்பிரேரணையை சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கமைய பாராளுமன்றம் அதற்கான அனுமதியினை வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: