திங்கள், 20 செப்டம்பர், 2010

மக்களை பணயமாக அவர்கள் வைத்திருந்ததால் பாதுகாப்பு படையினருக்கும், புலிகளுக்குமிடையிலான

பூநகரியில் நேற்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு
முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து மீண்டது குறித்துசாட்சியமளித்தோர் விபரிப்பு
பூநகரி பிரதேசத்தில் மீளகுடியேறிய மக்களின் சாட்சியங்களைப் பெறுவதற்காக கற்றறிந்த பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்கம் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வு நேற்று பிற்பகல் பூநகரி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. சொந்தக் கிராமங்களிலிருந்து முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டு வந்த போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பொது மக்கள் விபரித்தனர்.
அரசாங்கம் அறிவித்திருந்த பாதுகாப்பு வலயங்களில் புலிகள் தமது நிலைகளைப் பலப்படுத்துவதற்கான வழி ஏற்பட்டிருந்தது. மக்களை பணயமாக அவர்கள் வைத்திருந்ததால் பாதுகாப்பு படையினருக்கும், புலிகளுக்குமிடையிலான மோதலில் தாம் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தாகச் சுட்டிக் காட்டினர். புலிகளின் பிடியிலிருந்து மீண்டு இராணு வத்தினரிடம் பாதுகாப்புக்காக சென்று விடுவதற்கு புலிகளுடன் பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணைகள் நேற்றுக் காலை கண்டாவளை பிரதேச செயலக அலுவல கத்திலும் நடைபெற்றது. அங்கு சாட்சிய மளிக்கவென சுமார் நூறு பேரளவில் வந்திருந்தனர். பூநகரியிலும் சுமார் நூறு பேரளவில் சாட்சியமளித்தனர்.
நேற்று பிற்பகல் பூநகரியில் மக்களிடம் சாட்சியங்கள் பெறப்பட்டன. இரண்டு இடங்களிலும் சாட்சியமளித்தவர்கள் காணாமல் போயுள்ள தமது பிள்ளைகளைக் கண்டு பிடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களின் முறைபாடுகளை பெற்றுக் கொண்ட ஆணைக்குவின் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். விசாரணைகளின் பின்னர் பூநகரி மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு சென்ற ஆணைக்குழு உறுப்பினர்கள் சங்குப்பிட்டி இறங்கு துறையையும் பார்வையிட்டனர். இன்றைய தினம் (20ம் திகதி) முல்லைத்தீவில் விசாரணை இடம்பெறு கின்றது.

கருத்துகள் இல்லை: