வெள்ளி, 24 செப்டம்பர், 2010

கிழக்கு முதல்வருடன் தமிழரசுக்கட்சி சி. இராஜதுரை


மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. இராஜதுரை கிழக்கு மாகாண முதலமைச்சரின் சேவை நலனைப் பாராட்டி அவருக்குப் பொன்னாடை போற்றிக் கௌரவித்தார். புதன்கிழமை மட்டக்களப்பில் அவரது வீட்டில் முதலமைச்சர் சநத்திரகாந்தனைச் சந்தித்து பேசுகையில், "கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கான கட்சி என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல சேவைகளைப் புரிந்து வருகிறது. மக்களின் நலனில் அக்கறை கொள்கின்ற ஒரு கட்சியாகவும் இது செயற்படுகிறது. எனது ஆதரவு த.ம.வி.பு. கட்சிக்கு என்றும் உண்டு. மேலும் பல சேவைகளை எமது மக்களுக்காக ஆற்ற வேண்டி இருக்கின்றது. அதற்கு த.ம.வி.பு. கட்சியுடனான உறவு வலு சேர்க்கும் என நான் நம்புகிறேன்" என்றார். ___
தற்போது இந்தியாவில் உல்லாசம் காணும் புலிகளின் வாரிசு காத்தமுத்து காசியானந்தன  அந்தக் காலத்தில்  முன்னுக்க கொண்டு வர யாழ்பாண மேல்லதட்டு வர்க்க தமிழ் தலைமைகள் இராஜதுரையை ஓரம் கட்டியது யாவருக்கும் நினைவில் இருக்கும். இதனைத் தொடர்ந்து இராஜதுரையும் அரசுடன் இணைந்து செயற்படும் நிலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டதும் இங்கு நினைவு கூரத்தக்கது. பின்னொரு காலத்தில் இதே தலைமையை புலிகள் விருந்தோம்பலுக்கு சென்று சுட்டக் கொன்றது. இது புலிகளின் ஆதிக்க காலத்தில் நிகழ்ந்த துரோகம்.

கருத்துகள் இல்லை: