திங்கள், 23 ஜனவரி, 2017

நடிகை ரோகினி : ஜல்லிகட்டு போராட்டகாரர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் ! .. சமுகவலைத் திருவிழாவில் காணமல் போன பெரிய மீடியாக்கள்.. இன்னைக்கு முகநூல்தான் டாப்பு?

Just got back from Marina...The serious protesters are all very clear and strong. Felt proud seeing them handle everyone with respect.Let us not bother about the others....
நடிகை ரோகினி :  நான் இப்பொழுது மெரீனாவில் இருந்து வருகிறேன் . உண்மையான போராட்டக்காரர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் மீது நான் பெருமதிப்பு வைத்துள்ளேன்.அவர்களை இட்டு நான் பெருமதிப்பு கொள்கிறேன். ஏனையர்வர்களின் நோக்கங்கள் பற்றி நாம் கவலை கொள்ள தேவையில்லை என்று கருதுகிறேன்.

Vikkranth Uyir Nanban ·:  அடேய் தமிழர்களே... என்னைய கொல்ல பாக்குறீங்களா... பாரதி போட்டோ வெச்சு மீசையை முறுக்குனது ஒரு குத்தமாடா... வட நாட்டோட உங்களுக்கு இருக்குற பல வருஷ பகையை....என்னைய உள்ளே இழுத்து விட்டு சோலிய முடிக்க பாத்தீங்களேடா... இதனாலதாண்டா உங்கள பார்த்து இந்தியாவே  நடுங்குது..

Appar Sundaram:உடும்புப்பிடி புரட்சியால் உயிர்த்தெழும் தமிழகம் - மயிலாடுதுறையில் இருந்து சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது பழமொழி அதனை போல தமிழன் பல ஆண்டுகளாக நம் சொந்த நாட்டில் இழைக்கப்படும் அநீதிகளை அதர்மங்களை தன்னுள் அடக்கிவைத்திருந்த கோபம் இன்று வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. எரிமலை எப்போதும் அமைதியாகத்தான் இருக்கும் அது வெடிக்கும் போது எந்த சக்தியாலும் தடுக்கவே முடியாது
அதனைப்போல தமிழக இளைஞர்கள் தங்களுக்குள் வளர்த்து கொண்டே வந்த கோபத்தை மிக அமைதியாக தேசப்பிதா மகாத்மா காந்திஜி காட்டிச்சென்ற அகிம்சை என்னும் அறவழியில் தனது பண்பாடு.கலாச்சாரம். நாகரீகம் காக்க போராட துவங்கிவிட்டான். எரிமலை எரிய துவங்கும் போது முதலில் மலையை பிளந்து சாம்பலை தள்ளும், பிறகு புகையை உருவாக்குவது போல ஜல்லிக்கட்டு என்பது சாம்பல் போன்றதொரு துவக்கமே தவிர தன்னுள் உள்ள மது ஒழிப்பு, கல்வி வியாபாரமாவது, மணல்கொள்ளை, வனம் அழிப்பு, ஊழல், லஞ்சம் போன்றவற்றிற்கு விடை கொடுக்க விரும்பும் தீ பிழம்புகள் வெளியேறியே தீரும்.. இந்த போராட்டம் தமிழர்களின் வாழ்வு சுதந்திர போராட்டம் என்று கூட வர்ணிக்கலாம். காரணம் இந்த தீங்குகளில் இருந்து உண்மையிலேயே நாம் மீண்டால் தான் எதிர்கால தமிழன் அறிவாகவும், உடல் திடத்துடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், அழகாகவும், பொருள் பெற்றவனாகவும் விளங்குவான் என்பதில் எந்தவித ஐயமும் தேவையில்லை. ஆகவே நியாயமான எதிர்கால சந்ததிக்காக தமிழக இளைஞர்களின் அனைத்து கோரிக்கைகளையும் முறையாக செவிமடுத்து விரைந்து நிறைவேற்றி மத்திய மாநில அரசுகளும், நீதிமன்றமும் முடிவெடுப்பது சாலச்சிறந்தது.  நன்று.

Venki S பீட்டாவை தடை செய்யனும்..ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேனும்..காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியல்ல இருந்து காளையை தூக்கனும்.. இதான் நம்ம கோரிக்கை மக்களே.. இதிலிருந்து திசை திரும்ப வேண்டாம்..தொடர்ந்து போராடுவோம்.. போராட்டத்தில் யாரையும் தனித்து விளம்பர படுத்த வேண்டாம் அவர்களுக்கு அதுவே ஆபத்தாக மாற வாய்ப்பு உள்ளது...
Vikkranth Uyir Nanban 1 hr · அடேய் தமிழர்களே... என்னைய கொல்ல பாக்குறீங்களா... பாரதி போட்டோ வெச்சு மீசையை முறுக்குனது ஒரு குத்தமாடா... வட நாட்டோட உங்களுக்கு இருக்குற பல வருஷ பகையை....என்னைய உள்ளே இழுத்து விட்டு சோலிய முடிக்க பாத்தீங்களேடா... இதனாலதாண்டா உங்கள பார்த்து இந்தியாவே நடுங்குது...

கருத்துகள் இல்லை: