பிரதமருக்கு அருகில் தரையில் சு.சாமி |
vishnupriya R - Oneindia Tamil : கொழும்பு: இலங்கை பிரதமர் ராஜபக்ச வீட்டில் நவராத்திரி விழா கொண்டாட்டத்தையொட்டி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டார்.
நவராத்திரி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அது போல் இலங்கையிலும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவின் ஒரு பகுதியாக இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நாளை விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அலரியில் உள்ள மாளிகையில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கலந்து கொண்டார்.
இதற்க்காக நேற்றைய தினம் இலங்கை சென்ற அவருக்கு கொழும்பு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து இலங்கை பிரதமர் ராஜபக்ச தனது ட்விட்டரில் பதிவில், நீண்ட கால நண்பர் சுப்பிரமணியன் சாமி மற்றும் அமைச்சரவை சகாக்களுடன் நவராத்திரி விழா கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் பாதுகாப்பான, வளமான மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட நவராத்திரியாக அமைய வாழ்த்துகள், கடவுளின் எண்ணற்ற ஆசிர்வாதங்களுடன் நாம் பயணிக்கும் பாதையில் வெற்றி கிடைக்கட்டும் என கூறியுள்ள ராஜபக்ச புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
இலங்கை ராணுவத்தின் 72ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியிலும் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். தனது சொந்த கட்சியான பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் நிலையில் தொடர்ந்து சுப்பிரமணியன் சாமி பாஜகவை விமர்சித்து வந்தார்.
அக்கட்சியின் பொருளாதார கொள்கை, நிதியமைச்சர் நியமனம் உள்ளிட்டவற்றை வெளிப்படையாகவே அவர் விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து அவர் தேசிய செயற்குழுவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதையடுத்து சுப்பிரமணியன் சாமியும் ட்விட்டர் பயோவிலிருந்து பாஜகவை நீக்கிவிட்டார். தற்போது அவர் பயோவில் "Rajya Sabha MP, Former Union Cabinet Minister, Harvard Ph.D in Economics; Professor, I give as good as I get" மட்டுமே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக