Prasanna Venkatesh - GoodReturns Tamil : மொத்தம் ரூ.7.43 லட்சமாம்! 60,000 ரூபாய் கடனுடனும், தினமும் 20 கோடி ரூபாய் நஷ்டத்துடனும் இயங்கி வந்த ஏர் இந்தியாவை எப்படியாவது விற்பனை செய்தாக வேண்டும் என மத்திய அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தது.
தொடர் தோல்வியின் காரணமாக கடந்த முறை விற்பனை செய்யும் அளவீட்டை மாற்றிய போது 5 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு டாடா சன்ஸ் குழுமம் ஏலத்தில் வெற்றிப்பெற்று ஏர் இந்தியாவை கைப்பற்றியுள்ளது.
இந்த முயற்சிக்கு யார் காரணம் தெரியுமா..?
ரத்தன் டாடா சொன்னதை பாருங்க. ஏர் இந்தியா-க்கு போட்டியாக ஆகாஷ் ஏர்லையன்ஸ்.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வுக்கு ஓகே சொன்ன அரசு..! டாடா சன்ஸ் - டாடா டிரஸ்ட் டாடா சன்ஸ் - டாடா டிரஸ்ட் டாடா குழுமத்தில் இருக்கும் 100க்கும் அதிகமான நிறுவனங்களின் மொத்த ஹோல்டிங் நிறுவனம் தான் டாடா சன்ஸ். இந்த டாடா சன்ஸ் நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வைத்திருக்கும் ஒரு அமைப்பு தான் டாடா டிரஸ்ட். இது டாடா குடும்பத்திற்கு சொந்தமானது.
இந்த டாடா டிரஸ்ட் நிறுவனத்திற்கு தலைமை வகிப்பவர் தான் இந்தியாவின் தலைசிறந்த வர்த்தக தலைவர் ரத்தன் டாடா.
இதை தாண்டி JRD டாடா உருவாக்கிய டாடா ஏர்லையன்ஸ் ஏர் இந்தியாவாக மாறி தற்போது மீண்டும் டாடா குழுமத்திற்கே வந்துள்ளது மிகவும் எமோஷனலான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டாடா டிர்ஸ்ட் தலைவர் ரத்தன் டாடா முக்கியமான ஒருவருக்கு நன்றி கூறியுள்ளார். ஏர் இந்தியாவை வாங்க வேண்டும், ஏலத்தில் பங்குபெற வேண்டும் என்ற முடிவிற்கும் முழு முக்கிய காரணகர்த்தா டாடா சன்ஸ் தலைவவர் என்.சந்திரசேகரன் தான் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
சந்தையின் நிலவரம், வாய்ப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததில் துவங்கி ஏலத்தில் வென்றது முதல் அனைத்து பணிகளையும் டாடா சன்ஸ் தலைவவர் என்.சந்திரசேகரன் தலைமையிலான குழு தான் செய்துள்ளது என ரத்தன் டாடா, தமிழரான சந்திரசேகரனை பாராட்டியுள்ளார்.
டாடா சன்ஸ் தலைவவர் என்.சந்திரசேகரன் தலைமையில் பல நிறுவனங்கள் கைப்பற்றியிருந்தாலும் ஏர் இந்தியா-வை கைப்பற்றியது தான் அதிக மதிப்புடையது. இதை விட முக்கியமானது அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு நிறுவனத்தை எவ்விதமான கருத்து வேறுபாடு, பிரச்சனை இல்லாமல் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.
சமீபத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக சிஇஓ பதவி அறிமுகம் செய்ய உள்ளதாக செய்தி வெளியான நிலையில் அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு மறுப்பும் சந்திரசேகரன் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரத்தன் டாடாவின் பாராட்டு இவருக்கான 2வது பணிகால நீட்டிப்பு உறுதி செய்துள்ளது.
பொதுவாக ரத்தன் டாடாவும் சரி, டாடா குழுமம் சரி ஒரு வர்த்தக வெற்றி அல்லது நிறுவன கைப்பற்றலின் போது யார் காரணகர்த்தா என்பதை அறிவித்தது இல்லை. ஆனால் ஏர் இந்திய கொஞ்சம் ஸ்பெஷல் என்பதால் தான் ரத்தன் டாடா வெளிப்படையாகவே சந்திரசேகரனின் பணியை பாராட்டியுள்ளார். வாழ்த்துக்கள் சந்திரசேகரன்.. கலக்குங்க..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக