தினமலர் : புதுடில்லி: கோவிட் காரணமாக உள்நாட்டு விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளன. வரும் 18ம் தேதி முதல் வழக்கம் போல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மார்ச்சில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, அனைத்து விமான சேவைகளும், மார்ச், 23லிருந்து நிறுத்தி வைக்கப்பட்டன.
பின், வைரஸ் பாதிப்புகள் குறைந்ததை தொடர்ந்து, மே மாதம், உள்நாட்டு பயணியர் விமான சேவைகள் மட்டும் குறைந்தளவு கட்டுப்பாடுகளுடன் துவங்கப்பட்டன.
குறைந்தளவு பயணிகளை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் வரும் அக்.,18 முதல் உள்நாட்டு விமானங்களை எந்தவித கட்டுப்பாடுமின்றி இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் மற்றும் பயணத்தின் போதும், கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் மற்றும் விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக