Velmurugan P - Oneindia Tamil : சென்னை : தமிழகத்தில் அக்டோபர் 16ம் தேதி மாலை நிலவரப்படி ஒரே நாளில் 1,233 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,434 பேர் ஒரே நாளில் மீண்டனர்.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 15,238 ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 15,022 ஆக குறைந்துள்ளது.
முக்கிய பகுதியில் 2/3 பிஎச்கே பிளாட்கள் வெறும் ரூ.45 லட்சத்தில் இருந்து. இங்கே கிளிக் செய்யவும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 1200 என்கிற நிலையில் உள்ளது.
கோவை, ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது.
இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 26,85,874 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகம் - அதிகரிக்கும் நம்பிக்கை இந்தியாவில் கொரோனா பாதிப்பை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகம் - அதிகரிக்கும் நம்பிக்கை எவ்வளவு எவ்வளவு அதேநேரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,434 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 26,34,968 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எவ்வளவு உயிரிழப்பு எவ்வளவு தமிழகத்தில் கொரோனா காரணமாக அக்டோபர் 16ம் தேதி மாலை நிலவரப்படி 15 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35,884 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரம் ஆக குறைந்து உள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 15,238 ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 15,022 ஆக குறைந்துள்ளது. .
அதாவது நேற்றைவிட இன்று ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. கோவையில் பாதிப்பு கோவையில் பாதிப்பு தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 160 பேரும், கோவையில் 136 பேரும், செங்கல்பட்டில் 90 பேரும், ஈரோட்டில் 97 பேரும், திருப்பூரில் 70 பேரும், சேலத்தில் 55 பேரும், திருவள்ளூரில் 58 பேரும், தஞ்சாவூரில் 71 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் 1810 ஆகவும், கோவையில் 1575 ஆகவும், ஈரோட்டில் 908 ஆகவும், செங்கல்பட்டில் 1102 ஆகவும் உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக