zeenews.india.com : சென்னை: முந்திரி தொழிற்சாலை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆளும்கட்சியான திமுகவின் எம்.பி ரமேஷ், பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை இரண்டு நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது
தொழிற்சாலை பணியாளர் கொலை தொடர்பாக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் அவரது தொழிற்சாலையில் பணிபுரியும் நடராஜ், சுந்தர், வினோத், கந்தவேல், அல்லா பிச்சை என மொத்தம் 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 5 பேரை கைது செய்திருந்தனர்.
தற்போது அவரும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்த எம்.பி ரமேஷ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தன் மீது எந்த தவறும் இல்லை என்றும், ஆனால் சில அரசியல் கட்சிகள், இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக திமுகவை தாக்க பயன்படுத்தி வருவதால், தான் சரணடைவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தன் மீது தவறு எதுவும் இல்லை என்று சட்டரீதியாக நிரூபித்து உண்மையை வெளிச்சத்துக் கொண்டு வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக