tamil.indianexpress.com : கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் முந்திரி பருப்பு தொழிலாளியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட திமுக எம்.பி டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் அக்டோப்ர் 11ம் தேதி காலை நீதிமன்றத்தில் சரணடைந்தார். பண்ருட்டி நீதித்துறை நடுவர் ஆர் கற்பகவள்ளி சரணடைந்த கடலூர் எம்.பி. டி.ஆர்.வி.எஸ். ரமேஷை அக்டோபர் 13ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கோவிட்-19 சோதனைக்கு நடத்தப்பட்ட பிறகு ரமேஷ் கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். திமுக எம்.பி ரமேஷின் வழக்கறிஞர் கே.சிவராஜ் கடலூர் மத்திய சிறையில் உள்ள எம்.பி.க்கு சிறையில் முதல் வகுப்பு அறையை அளிக்க வேண்டும் என கோரியுள்ளார். கோவிட்-19 பரிசோதனையில் தொற்று இல்லை என்று முடிவு வந்தால் ரமேஷ் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 12) சிறையில் முதல் வகுப்பு அறைக்கு மாற்றப்படுவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கொலை வழக்கில் திமுக எம்.பி டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், தனது முந்திரி பருப்பு தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி இறந்த பிறகு ஒரு சில அரசியல் கட்சிகள் திமுகவிற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்ததை நினைத்து வேதனை அடைந்தேன். தனது தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் நல்லாட்சிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த மக்களுக்கு இடம் கொடுக்க விரும்பவில்லை என்றும் அதனால் அவர் நீதிமன்றத்தில் சரணடைய முடிவு செய்தார் என்று தெரிவித்தார். மேலு, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சட்டப்பூர்வமாக எதிர்கொண்டு போதுமான ஆதாரங்களை அளித்து நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
திமுக எம்.பி டி.ஆர்.வி.எஸ். ரமேஷுக்கு சொந்தமான டிஆர்வி காயத்திரி முந்திரி தொழிற்சாலையில் செப்டம்பர் 20 ஆம் தேதி ஜி கோவிந்தராசு என்ற தொழிலாளி இறந்தார். அவருடைய மகன் தனது தந்தையின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் அதனால் அவருடைய மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து, திமுக எம்.பி டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் தனி உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் எம். கந்தவேல், எம். அல்லா பிச்சை, கே. வினோத், சுந்தரராஜன் என 5 பேரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். எம்.பி ரமேஷுக்கு சம்மன் கொடுக்க சனிக்கிழமை ரமேஷின் வீட்டிற்கு வந்த விசாரணை குழு, அவர் வீட்டில் இல்லை என்பதை அறிந்து அவரைத் தேடத் தொடங்கினர்.
இந்த நிலையில்தான், திமுக எம்.பி டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் அக்டோபர் 11ம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.பி ரமேஷுக்கு சிறையில் முதல் வகுப்பு அறை அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக