சனி, 16 அக்டோபர், 2021

சோனியா காந்தி உறுதி : காங்கிரஸ் கட்சிக்கு நானே முழு நேர தலைவர்

Jeyalakshmi C  -   Oneindia Tamil :   டெல்லி: ஊடகங்கள் மூலம் என்னிடம் பேச வேண்டிய அவசியமில்லை என்றும் கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஒரு சுதந்திரமான மற்றும் நேர்மையான விவாதம் வேண்டும் என்றும் சோனியாகாந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடியது காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி இதனைத் தெரிவித்துள்ளார். நான் சொல்வதற்கு நீங்கள் அனுமதித்தால், முழு நேர காங்கிரஸ் தலைவராக இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி என்ற மத்திய அரசின் தொடர் பிரச்சாரம் நம்பக்கூடியதாக இல்லை.
நமக்கு தெரிந்தவரை பொருளாதார மீட்பு என கூறி தேசிய சொத்துக்களை விற்பதே மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி என்றும் மத்திய அரசை அவர் விமர்சித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்த பிறகு , கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பை சோனியா காந்தி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். காரியக் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டி கட்சியின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என குலாம் நபி ஆசாத், கபில்சிபல் உள்ளிட்ட 23 காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார்கள்.

சோனியா காந்தி பேச்சு சோனியா காந்தி பேச்சு பரபரப்பான இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சோனியாகாந்தி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் பூரண குணமடைய தான் பிரார்த்தனை செய்கிறேன்.
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதற்கு அடையாளம் தான் பல ஆண்டுகளாக சேமித்த இந்திய சொத்துக்களை விற்கும் மத்திய அரசின் முடிவு.
கட்சித்தலைவர் தேர்தல் கட்சித்தலைவர் தேர்தல் காங்கிரஸ் உட்கட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று இறுதி செய்யப்படுகிறது.
கொரோனா காரணமாக கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படாமல் இருந்த சூழலில் கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தேர்தலை நடத்த கோரிக்கை வைத்து வந்தனர், எனவே இன்றைய கூட்டத்தில் இறுதி செய்யப்படும்.

சொல்வதற்கு நீங்கள் அனுமதித்தால், முழு நேர காங்கிரஸ் தலைவராக இருக்கிறேன் என்று கூறினார். நான் ஒருமித்த எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளுடன் தொடர்ந்து உரையாடி வருகிறேன். நாம் தேசிய அளவில் கூட்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளோம். நாடாளுமன்றத்திலும் நாம் ஒருங்கிணைத்து செயல்படுகிறோம். நேர்மையான விவாதம் நேர்மையான விவாதம் ஊடகங்கள் மூலம் என்னிடம் பேச வேண்டிய அவசியமில்லை. கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஒரு சுதந்திரமான மற்றும் நேர்மையான விவாதம் வேண்டும் என்றும் இந்த அறையின் நான்கு சுவர்களுக்கு வெளியே தொடர்பு கொள்ள வேண்டியது காரிய கமிட்டியின் கூட்டு முடிவாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

முழு அமைப்பும் மறுமலர்ச்சியை விரும்புகிறது ஆனால் இதற்கு ஒற்றுமையும் கட்சியின் நலன்களையும் முதன்மையாக வைத்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அதற்கு சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை. 2019 ல் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் இருந்த நிலையில் திரும்ப வேண்டும் என்று காரியக் கமிட்டிக் கூட்டம் என்னிடம் கேட்டதிலிருந்து நான் இடைக்கால காங்கிரஸ் தலைவராக இருந்தேன். தேவைப்பட்டால் நானே நிரந்தர தலைவராக செயல்படுவேன். இன்று ஒருமுறை தெளிவைக் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம். முழு அளவிலான நிறுவனத் தேர்தல்களுக்கான அட்டவணை உங்கள் முன் இருக்கும் பொதுச் செயலாளர் கே கே வேணுகோபால் முழு செயல்முறையையும் பின்னர் உங்களுக்கு விளக்குவார் என கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்த சோனியா தனது தோள் மீது கட்சியை வைத்து தாங்கியவர். 10 ஆண்டுகள் அவர் காட்டிய முனைப்பும், அக்கறையும் ஏராளமானவை. 2005 முதல் 2014ஆம் வரை ஆளுங்கட்சியாக இருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை நடத்துவதற்கு முதுகெலும்பாகவும் இருந்தவர். ஆனால் இன்று அவர் கண் முன்பாகவே காங்கிரஸ் கலகலத்துக் கொண்டுள்ளது.

ராகுல்காந்தி தலைவரான பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் சந்தித்த தொடர் தோல்விகள் கட்சியை மேலும் பலவீனமாக்கிவிட்டது. காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்த இடங்களில் எல்லாம் பாஜக வீறுகொண்டு எழ ஆரம்பித்துவிட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகினார்.
இதனையடுத்து சோனியா காந்தி இடைக்கால தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவருடைய உடல்நிலை காரணமாக, அவரால் தீவிரமாக கட்சி பணியாற்ற முடியவில்லை. இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் நிரந்தர தலைவர் நியமிக்கப்படாமலேயே உள்ளது.

பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்பூசல்களும், அதனால் குழப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த உட்கட்சி சண்டையால் காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரச்சினையை வெளிச்சம் போட்டு காட்டியது. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சோனியாகாந்தி தலைமையில் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கட்சியின் முழு நேர தலைவராக தலைவராக செயல்படவும் தயாராகி விட்டார் சோனியாகாந்தி. கட்சி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா பார்க்கலாம்.


கருத்துகள் இல்லை: