திங்கள், 30 மார்ச், 2020

பசியால் வாடும் குழந்தைகளையும் ஏழை தொழிலாளர்களையும் மோடி அரசு கைவிட்டுவிட்டது? சிதம்பரம் அதிரடி!

tamil.oneindia.com - mathivanan-maran.: சென்னை: கொரோனா லாக்டவுனால் பசியால் வாடும் குழந்தைகளையும் ஏழைத் தொழிலாளர்களையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கைவிட்டுவிட்டதா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் இருந்து வெளியேறும் உ.பி. இளைஞர்கள்... அதிர வைக்கும் வீடியோ
இது தொடர்பாக ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தொலைக்காட்சியில் பார்க்கும் பசியில் வாடும்

குழந்தைகளையும் தம் கிராமங்களை நோக்கி நடந்தே போகும் வேலையில்லாத தொழிலாளர்களையும் அரசு பார்க்கவில்லையா? இதற்குக் காரணம் அரசின் அறியாமையா? அரசுக்குச் சொல்லப்படும் தவறான யோசனைகளா? நிர்வாகத் திறமையின்மையா?
கண்ணெதிரே பெருந்துயரம் நிகழும்போது பிரதமரும் நிதி அமைச்சரும் எதற்காக காத்திருக்கின்றனர்? பசியால் வாடும் குழந்தைகளயும் ஏழை தொழிலாளர்களையும் மோடி அரசு கைவிட்டுவிட்டதா?
அரசுக்கு அவசரமாகத் தேவைப்பட்டால் பணத்தை "உருவாக்கும்" - அதாவது அச்சடிக்கும் - உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. மாநில அரசுகளுக்குக் கிடையாது. இது அவசர, போர்க்காலச் சூழ்நிலை. எனவே மாநில அரசுகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் பணத்தை மத்திய அரசு தாராளமாகத் தரவேண்டும்.
ரூ 5 லட்சம் கோடி தேவைப்படும் சூழ்நிலையில் ரூ 1 லட்சம் கோடி மட்டும் ஒதுக்கிய அரசைப் பற்றி என்ன சொல்வது? இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: