ஞாயிறு, 29 மார்ச், 2020

ஊரடங்கு அறிவித்திருக்கா விட்டால் கொரோனா உலகம் முழுவதும் 4 கோடி மக்களை பலி கொண்டு இருக்கும் ஆய்வில் தகவல்

ஊரடங்கு அறிவித்திருக்கா விட்டால் கொரோனா உலகம் முழுவதும் 4 கோடி மக்களை பலி கொண்டு இருக்கும் ஆய்வில் தகவல்தினத்தந்தி : கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அறிவித்திருக்கா விட்டால் உலகம் முழுவதும் 4 கோடி மக்களை பலி கொண்டு இருக்கும் 100 கோடிபேர் நோயுற்றிருக்கலாம் என ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது. லண்டன் கொரோனா வைரஸின் பரவலை தடுக்க உலகில பெரும் பகுதி நாடுகள் ஊரடங்கு  உத்தரவை அறிவித்து உள்ளன.அவ்வாறு அறிவிக்கவில்லை என்றால்  இந்த நோய் 4 கோடி மக்களை பலிகொண்டு இருக்கும்  100 கோடிபேர் நோயுற்றிருக்கலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 700ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆயிரத்து 400ஐ கடந்து உள்ளது.உலகம் முழுவதும் 1 லட்சத்து 33ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு குணமாகியுள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு எதிராக எந்த நாடுகளும் ஊரடங்கு உத்தரவு நடவடிக்கை எடுக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதை லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

ஆய்வுகள் என்ன நடக்கும் என்பதற்கான கணிப்புகள் அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர், ஆனால் அவை பிரச்சினையின் அளவு மற்றும் விரைவான, தீர்க்கமான மற்றும் கூட்டு நடவடிக்கைகளின் நன்மைகளை விளக்குகின்றன.

இந்த அறிக்கை 2019 டிசம்பரில் சீனாவின் உகானில் பரவதொடங்கியதில் இருந்து ஆய்வுக் குழுவின் பன்னிரண்டாவது அறிக்கை ஆகும.

முதியவர்களைப் பாதுகாத்தல் மற்றும் சமூக விலகல் போன்ற தணிப்பு உத்திகளால், இறப்பு எண்ணிக்கை 50 சதவிகிதத்திலிருந்து 95 சதவிகிதம் வரை குறைந்து உள்ளது.100 கோடிப்பேர் பாதிப்பட்டு இருப்பர். இதனால் 3.8 கோடி மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என கூறப்பட்டு உள்ளது.

இம்பீரியல் மருத்துவ அமைப்பின் உறுப்பினரான இணை ஆசிரியர் டாக்டர் பேட்ரிக் வாக்கர் கூறும்போதுஎவ்வாறாயினும், விரைவான, தீர்க்கமான மற்றும் கூட்டு நடவடிக்கை அடுத்த ஆண்டில் லட்சகணக்கான உயிர்களைக் காப்பாற்றும் என்பதை எங்கள் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன என கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை: