Karthikeyan Fastura :;
21
நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது "செயல்திட்டம் இல்லாத இந்த லாக்டவுன்
கொரோனாவை விட அதிக இறப்புகளை உருவாக்கும்" என்று எழுதினேன். இன்று
வடமாநிலங்களில் இருந்து வரும் செய்திகள் அதை தான் சொல்கின்றன. மிக கேவலமான
அரசாங்கத்தை நாம் கொண்டிருக்கிறோம். உபியில் ஊர் திரும்புபவர்களை மொத்தமாக
உட்கார வைத்து மருந்தடித்து அனுப்புகிறார்கள். சட்டென்று நாஸி படைகள்
செய்த இதே அட்டூழியம் கண் முன் வந்தது. டெல்லியில் இருந்து தத்தம்
ஊருகளுக்கு பசியிலும் பட்டினியிலும் பல மைல் தூரங்கள் வெயிலில் நடந்த களைப்பில்
பல பேர் உயிர்விட்டிருக்கிறார்கள். இது மீடியா கவர் செய்த ஒரு பானைக்கு
ஒரு சோறு பதமாக ஒரு சிறு பகுதி. ஆனால் கணக்கில் வராத பயணங்களும் பலிகளும்
எத்தனை எத்தனை ? இப்பவும் இந்த அரசிற்கு முட்டு கொடுப்பதை விட்டுட்டு
அறிவுடன் அறத்துடன் பேசுவது நல்லது.
ஏனென்றால் இது இதோடு முடிந்துவிடாது. ஏப்ரல், மே மாதம் தான் இதன்
உச்சகட்டத்தை பார்க்கப்போகிறோமோ என்று அஞ்சுகிறேன். இதில் பாதிக்கப்படபோவது
அனைவருமே. மனிதர்களுக்கு இடையேயான வலைப்பின்னலில் தான் இந்த உலகம் ஒரு
குறையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. இன்று அந்த சங்கிலி முற்றிலுமாக
உடைத்து போடப்பட்டுள்ளது.
ஜனவரி 20ஆம் தேதி இந்தியாவில் முதல் கேஸ் வந்ததாக இணையத்தில் உள்ளது. ஒரு மாதத்திற்கு பிறகாவது விமான சேவைகளை துண்டித்திருந்தால் இந்த பிரச்சனை இவ்வளவு தீவிரமாக வந்திருக்காது. ராகுல்காந்தி பிப்ரவரி முதல் வாரத்திலேயே எச்சரிக்கிறார். உலக சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். எதையும் காதில் வாங்காமல் இருந்திருக்கிறது இந்த அரசு.
சரி பிரச்சனை வந்த பிறகாவது திறம்பட செயல்பட வேண்டாமா? லாக்டவுன் அறிவிப்பதற்கு நான்கு நாட்கள் முன்பு வரை இங்கிருந்து வென்ட்டிலேட்டர் மிஷின்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மத்திய அரசில் ஒரு படித்தவர் அல்லது மூளையுள்ளவர் இருந்திருந்தாலும்
எவ்வளவு பெரிய முட்டாள்தனங்களை செய்கிறோம் என்று உணர்ந்திருப்பார்கள். இவ்வளவு கூத்திற்கும் நடுவில் ராமாயணம் பாருங்கள் என்று மத்திய மந்திரிகள் டிவிக்கு போஸ் கொடுத்து ட்விட் செய்கிறார்கள் என்பது எத்தனை அயோக்கித்தனம்.
ஒருவர் இவ்வளவு நாள் சங்கியாக வாழ்ந்ததை முட்டாள்த்தனம் என்று விடலாம். இப்பவும் அப்படி இருப்பார்கள் என்றால் அருவருக்கத்தக்க அயோக்கியத்தனம் என்பேன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக