தினத்தந்தி : நிஜாமுதீன் தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் 275 பேரை டெல்லி போலீசார் இன்று பிடித்துள்ளனர்
புதுடெல்லி: டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் (நிஜாமுதீன் மர்காஸ்) தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மதகுருக்களும் பங்கேற்றனர். அந்தயில் பங்கேற்ற பின்னர் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்.

நிஜாமுதீனில்
நடைபெற்ற தப்லிகி ஜமாத் இஸ்லாமிய மத நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கும்
கொரோனா வைரஸ் பரவியுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில்
பங்கேற்றவர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் இந்தியாவில்
கொரோனா வைரஸ் பரவ தப்லிகி ஜமாத் மிக முக்கிய காரனமாக அமைந்துள்ளது.
இதற்கிடையே,
கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தெலுங்கானா திரும்பிய 6 பேர் கொரோனா வைரஸ்
காரணமாக உயிரிழந்துள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த
ஒருவரும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனால்,
நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும்
தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் இந்தோனேசியா,
கஜகஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள்
பலர் விசாரணைக்கு அஞ்சி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக
உள்ளனர்.
இந்நிலையில், டெல்லி சிறப்பு போலீசார்,
அரசுடன் இணைந்து இன்று அதிகாலை டெல்லி முழுவதும் அதிரடி தேடுதல் வேட்டை
நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையின்போது நிஜாமுதீன் இஸ்லாமிய கூட்டத்தில்
பங்கேற்று பதுங்கியிருந்த 275 வெளிநாட்டினரை போலீசார் அதிடியாக கைது
செய்தனர்.
பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர்
இந்தோனேசியா( 172 பேர்), கஜகஸ்தான் (36 பேர்), வங்காளதேசம் (21பேர்) ஆகிய
நாடுகளை சேர்ந்தவர்களாவர். இதையடுத்து அவர்கள் அனைவரும்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக