சனி, 15 பிப்ரவரி, 2020

இது வெறும் இஸ்லாமியர்களின் பிரச்சனை அல்ல.... ஒன்றாக சேர்ந்து போராடியே தீரவேண்டும் .


Shalin Maria Lawrence : நேற்று வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் மேல் நடந்தது மிக பெரிய வன்முறை.
கூட்டத்தில் குழந்தைகள் இருப்பது தெரிந்தும் அவர்களை அடிக்க முற்பட்டது அவர்களை இந்த அரசாங்கம் மனிதர்களாக கூட மதிக்கவில்லை என்பதனை காட்டுகிறது.
இந்திய அரசியலமைப்பு ஆர்ட்டிகள் 19(1)(b) ஆயுதமில்லாமல் அமைதியான முறையில் போராட்டதுக்காக மக்கள் கூடுவது அவர்களது உரிமை என்று சொல்லுகிறது. ஆனால் இந்த பாசிச அரசோ திரும்ப திரும்ப இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி வருகிறது.
காலம் காலமாக பாஜக பல போராட்டங்களை நிகழ்த்தியுள்ளது.காங்கிரஸ் ஆட்சியின் போது அவர்கள் ரோட்டில் புரளாத நாள் கிடையாது .அப்படி இருந்தும் இப்போதைய போராட்டகாரர்களை அவர்கள் முடக்குவது பாஜகவின் ரெட்டை வேஷத்தை வெளிபடுத்துகிறது.
இங்கே அனைவரும் சமம் எனும்போது சிறுபான்மையினருக்கு மட்டும் போராட வாய்ப்பு கொடுக்காதது ஏற்கனவே சமமற்ற நிலையை உறுதி செய்கிறது.ஆகவே NCR எனும் ஆயுதமும் சிறுபான்மையினருக்கு எதிரான ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

எல்லோருடைய ஓட்டுக்களையும், வரி பணத்தையும் வாங்கிக்கொண்டு ஆனால் ஒரு சாராருக்கு மட்டும் அதிலும் குறிபிட்ட சில சமூகங்களுக்கு மட்டும் உழைக்கும் இந்த அரசு வெட்கமற்றது.
இஸ்லாமியர்கள் போராடவில்லையென்றால் அவர்களுக்கு வேறு என்னென்ன கொடுமைகள் நடக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
இஸ்லாமியர்கள் அவர்களின் தனிபட்ட உரிமைக்காக போராடினாலும் இதில் இந்திய நாட்டின் பொது நலமமும் ஆரோக்கியமும் அடங்கி இருப்பதால் பொது சமூகமும் இதனால் பயனடையும். ஆகவே இது வெறும் இஸ்லாமியர்களின் பிரச்சனை அல்ல.பொது சமூகம் ஜனநாயகத்தை காப்பாற்ற இவர்களோடு ஒன்றாக சேர்ந்து போராடியே ஆக வேண்டும்.

கருத்துகள் இல்லை: