வியாழன், 13 பிப்ரவரி, 2020

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காஞ்சி சங்கரமடத்துக்கு வீடு தானம்

tamil.indianexpress.com : பாடகர்  எஸ்.பி.பாலசுப்ரமணியம் நெல்லூரில் உள்ள தனது பூர்வீக வீட்டை வேத பாடசாலை அமைப்பதற்காக விஜயேந்திரரை சந்தித்து சங்கர மடத்துக்கு தானமாக அளித்துள்ளார்.
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி என பல மொழி சினிமாக்களில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவருடைய இசை சேவையை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருந்து வழங்கி கௌரவித்துள்ளது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர். தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும் இவர் ஒரு தமிழ் சினிமா பாடகராகவே அறியப்படுகிறார். திரைப்பட பின்னணி பாடகராக வளர்ந்த பின் அவர் சென்னைக்கு குடியேறிவிட்டாலும் அவருடைய பூர்வீக வீடு நெல்லூரில் அப்படியே இருந்து வந்தது.

இந்த நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நெல்லூரில் உள்ள தனது பூர்வீக வீட்டை வேத பாடசாலை அமைப்பதற்காக காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரரை நேரில் சந்தித்து காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்துக்கு தானமாக அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: