மாலைமலர் : தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து இந்தியா வந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாங்காக்கில் இருந்து இந்தியா வந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
பயணிகளை பரிசோதிக்கும் நிபுணர்கள்
கொல்கத்தா:
சீனாவில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை 1,357 உயிர்களை பலி வாங்கி உள்ளது.
மேலும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. சீனாவில் இருந்து 25க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள், சீனாவில் இருந்து திரும்பும் பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவின் கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் பயணித்து கொல்கத்தா திரும்பிய 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக