புதன், 12 பிப்ரவரி, 2020

கொட நாடு கொலை ..காணாமல் போன சாட்சி கோர்ட்டில் ஆஜர்.. சூடுபிடிக்கும் வழக்கு!

kodanadkodanad casevikatan.com - சதீஸ் ராமசாமி = கே.அருண் காணாமல் போனதாக தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த கொடநாடு கொலை வழக்கின் முதல் சாட்சியான கிருஷ்ண தாப்பா நீதிமன்றத்தில் இன்று திடீரென ஆஜரானார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி நுழைந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்து மற்றொரு காவலாளியைத் தாக்கிவிட்டு உள்ளே சென்றது.
பின்னர் பங்களாவில் இருந்த சில ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில், முக்கியக் குற்றவாளியான கனகராஜ் சேலம் அருகில் வாகன விபத்தில் உயிரிழந்தார். அன்றைய தினமே பாலக்காட்டில் ஏற்பட்ட விபத்தில் இந்த வழக்கில் தொடர்புடைய சயான் காயங்களுடன் தப்பினாலும் சயானின் மனைவி, மகன் உயிரிழந்தனர்.



இந்த வழக்கில் தொடர்புடைய சயான், கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், வாளையார் மனோஜ், மனோஜ் சமி ஜித்தீன் ஜாய், ஜம்சீர் அலி மற்றும் பிஜின் குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.




kodanad case
kodanad case
வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் 2-ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை துவங்கியது. ஆனால், இந்த வழக்கில் புகார்தாரர் மற்றும் முக்கிய சாட்சியான கிருஷ்ண தாப்பா கொலை நடந்த சில மாதங்களிலேயே கொடநாடு எஸ்டேட்டை விட்டு வெளியேறிய நிலையில், இவரை போலீஸார் நேபாளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று தேடினர். அங்கும் கிடைக்காத நிலையில் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இதனால் சாட்சி விசாரணை செய்வதில் தாமதம் ஏற்பட்டது.





கடந்த மாதம் 29-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரண்டாவது சாட்சியான பஞ்சம் விஷ்வகர்மா, மூன்றாவது சாட்சியான சுனில் தாப்பா ஆகியோர் அரசு தரப்பில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால், எதிர் தரப்பினர் முதல் சாட்சி இல்லை என ஆட்சேபனை தெரிவித்தனர். அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.




kodanad case
kodanad case
அவர்கள் இந்தியில் தெரிவித்த தகவல்களை தமிழில் மொழிபெயர்த்து பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டு உள்ள 10 பேரில் சயான், வளையார் மனோஜ் உட்பட 9 பேர் ஆஜராயினர்.





இந்த வழக்கின் முக்கிய நேரடி சாட்சியான கிருஷ்ண தாப்பா காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், இன்று திடீரென ஆஜரானார். நேபாளத்திலிருந்து வந்தாக தெரிவித்த அவரிடம் சாட்சி விசாரணை நடைபெற்றது. நீதிமன்றத்தில் ஆஜரான கிருஷ்ண தாப்பாவை நீதிபதி தன்னைத் தாக்கிய குற்றவாளிகளை அடையாளம் காட்டச்சொன்னார்.
கொடநாடு எஸ்டேட் 10-ம் கேட் காவலாளியாக சம்பவத்தன்று இருந்த கிருஷ்ண தாப்பா நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 பேரில் 5 பேரை அடையாளம் காட்டினார். 4-வது சாட்சியான எஸ்டேட் டிரைவர் யோகநாதனிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு மாவட்ட நீதிபதி வடமலை ஒத்திவைத்தார்.




kodanad case
kodanad case
சாட்சி விசாரணை துவங்கி இரண்டு மாதங்களுக்குப் பிறகு புகார்தாரரும் முக்கிய சாட்சியான கிருஷ்ண தாப்பா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதனால் கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

கருத்துகள் இல்லை: