மாலைமலர் :
வருகிற ஏப்ரல் மாதத்தில் புதிய கட்சியை
தொடங்கி பொதுமக்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த தயார் ஆகிறார். 8 ஊர்களில்
மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
சென்னை:
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் வருகை யை அறிவித்தார்.
தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் நிற்க போவதாக அறிவித்தார். அதன் பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன.
ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையையும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தினார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 ஆண்டுகள் முழுமையாக கடந்த நிலையில் இன்னும் கட்சி அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் இந்த 2 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளில் பரபரப்புகளை ஏற்படுத்தியே வருகிறார்.
ஸ்டெலைட் போராட்டம், ராஜீவ் கொலையாளிகள் போன்ற விஷயங்களில் ரஜினி சொன்ன கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. மோடிக்கு ஆதரவாக ரஜினி கொடுத்த பேட்டிகளும் பரபரப்பானது.
தூத்துக்குடி போராட்டத்தில் இருந்து சிஏஏ வரைக்கும் அரசுக்கு ஆதரவான கருத்துகளையே வெளிப்படுத்தி வரும் ரஜினியை பாஜகவின் ஆதரவாளராகவே பலரும் பார்க்கிறார்கள்.
ஆனாலும் ரஜினியின் தனிக்கட்சிக்கான இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன என்கிறார்கள் அவரைச் சுற்றியுள்ளவர்கள். போர் வரட்டும் என்று சட்டமன்றத் தேர்தலைக் குறிப்பிட்டு ஏற்கனவே சொல்லியிருந்தார் ரஜினிகாந்த்.
2020-ம் ஆண்டு தனது கடைசி பட்ஜெட்டைச் சமர்ப்பிக்க அதிமுக அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் வரும் ஏப்ரலில் கட்சி ஆரம்பிப்பது என்று முடிவு செய்துள்ள ரஜினி அதைத் தொடர்ந்து மக்களுடன் தீவிரமாக இயங்கத் தயாராகி விட்டார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கியமான சில நிர்வாகிகளையும் வழக்கம் போல் தனது அரசியல், கலை நண்பர்கள் சிலரையும் வீட்டுக்கு அழைத்து வெகு நேரம் விவாதித்திருக்கிறார்.
சிலர் சித்திரை மாதம் அரசியலில் முத்திரை பதிப்பார் என்கிறார்கள். எட்டு இடங்களில் மாநாடு போடுவது என்றும் அதற்கு முன்னதாக செப்டம்பரில் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்வது என்றும் திட்டத்தில் இருக்கிறார்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி பயணம் செய்ததைப் போல தமிழகத்தின் சந்து பொந்துகளில் உள்ள கிராமங்களையெல்லாம் விடாமல் பயணம் செய்து தனக்கு ஆதரவு திரட்டுவதுதான் ரஜினியின் திட்டம்.
திறந்த வேனில் நின்று மக்களைச் சந்திப்பதா அல்லது ஆங்காங்கே நடந்து சென்று மக்களைச் சந்திப்பதா? என்பது குறித்தும் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.
ஏற்கெனவே ரஜினி அங்கே மாநாடு போடுகிறார், இங்கே மாநாடு போடுகிறார் என்று பல்வேறு தகவல்கள் வந்தன. ஆனால், ரஜினி இப்போதுதான் முதல் மாநாடு பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம் வாய் திறந்திருக்கிறார்.
மதுரை, திருச்சி ஆகிய இரு இடங்களிலும் நிலம் தேடும் பணிகளில் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் இறங்கி விட்டன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக