மாலைமலர் :
சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு
சிகிச்சையளித்த மருத்துவ ஊழியர்கள் 6 பேர் அதே வைரஸ் தாக்கி
உயிரிழந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
பீஜிங்:
சீனாவின்
ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின்
பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுருத்தலாக விளங்கிவருகிறது.
இந்த வைரஸ் பாதிப்பிற்கு 1,380 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 60 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவியுள்ள வுகான் நகரில் உள்ள மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் என அனைத்து மருத்துவ ஊழியர்களும் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.
இவர்களில் பலரும் தங்கள் குடும்ப உறவுகளை பிரிந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

வைரஸ்
தங்களுக்கும் பரவி விடக்கூடாது என்ற எண்ணத்தில் மருத்துவ ஊழியர்கள் தங்கள்
முகங்களில் முகமுடிகளை அணிந்துகொண்டுதான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து
வருகின்றனர்.
ஆனாலும், அதிக எண்ணிக்கையிலான
நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாலும், போதிய மருந்துகள்,
முகமூடி போன்ற உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தாலும் சில
டாக்டர்களும், செவிலியர்கள் என பல மருத்துவ ஊழியர்கள் நோயாளிகளுக்கு எந்த
வித தடுப்பு உபகரணங்களும் இல்லாமல் சிகிச்சை அளித்துவருகினறனர்.
இதனால் நோயாளிகளிடமிருந்து மருத்துவ ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவிவருகிறது.
இதற்கிடையில்,
கொரோனா குறித்து முதல் முதலில் அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு எச்சரிக்கை
விடுத்த வுகான் நகரை சேர்ந்த டாக்டர் லி வென்லியங் கடந்த 7-ம் தேதி வைரஸ்
பாதிப்பிற்கு உள்ளாகி பரிதாபகாக உயிரிழந்தார்.
இவரது
மரணம் சீன மக்களிடையே சோகத்தையும், அரசுக்கு எதிராக கடுமையான கோபத்தையும்
உருவாக்கியது. சீன அரசு வைரஸ் பாதிப்பு தொடர்பான உண்மை தகவல்களை மக்களிடம்
தெரிவிக்க மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில்,
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவ ஊழியர்கள்
எத்தனைபேர் அதே வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை சீன அரசு தற்போது
வெளியிட்டுள்ளது.
அதில் டாக்டர் உள்பட மருத்துவ ஊழியர்கள் 6 பேர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வுகானில்
உள்ள ஒரு மருத்துவமனையில் பணியில் உள்ள 16 டாக்டர்கள் உள்பட 16 மருத்துவ
ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக அங்கு வேலை செய்துவரும் டாக்டர்
ஒருவர் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக