செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

கலைஞர் மீதான தொடர் அவதூறுகள் .. சமுகவலையில் .....

தமிழ் வீழ்ந்தாலும் கருணாதி வாழவேண்டும் என்று ஒரு எள்ளல் பதிவை  திமுக எதிர்ப்பாளர்  (மறைநாயகன் - இலங்கை ) சமுக வலையில் பதிவிட்டு இருந்தார் .அது துரோகத்தை பற்றிய கட்டுரை என்று வேறு குறிப்பிட்டு இருந்தார் .  
அந்த பதிவுக்கு  பலர் பதில்  கருத்துக்களை பதிவிட்டிருந்தனர் .அவை :
 Radha Manohar தமிழர்களின் போராட்டங்களில் அதிகமாக கேட்ட வார்த்தை துரோகி என்பது தான் . எவர் எவர் எல்லாம் துரோகி என்று அதிகமாக கூவுகிரர்களோ அவர்களேதான் மிகபெரிய துரோகிகள் ஆக இருந்ததுதான் வரலாறு .. இதில் மாற்று கருத்தே இல்லை .ஏனெனில் இது எல்லோருக்கும் தெரிந்த வரலாறு . கலைஞர் பற்றி கருணாநிதி என்று ஏகவசனத்தில் கூறுவது ஒரு வித பாசிச நோய் தவிர வேறில்லை . ஈழ போராட்த்தை பற்றிய புரிதல்களை தமிழகம் முழுவதற்கும் மட்டுமலல் முழு இந்தியாவுக்கும் எடுத்து சென்று தெரியப்படுத்தியவர் கலைஞரும் திராவிட முன்னேற்ற கழகமும்தான் .. ஈழ தமிழர்களின் ஆதரவு நிலைப்பாட்டினால் இரண்டு தடவை ஆட்சியை இழந்த கட்சி திராவிட முன்னேற்ற கழகமாகும் . கலைஞர் மீதும் திமுக மீதும் பலர் ஒவ்வாமை கொண்டிருபதற்கு முக்கிய காரணம் அவர்களின் சுய ஜாதி அபிமானம்தான்

 மறைநாயகன் : உங்கள் கருத்துக்கள் நியாயமானவை.
: கருணாநிதி வாரிசு அரசியலை நடத்தி தனது நற்பெயரைக் கெடுத்து விட்டார்.

Radha Manohar  :  மிக மிக தவறான பதில் . திராவிட இயக்கத்தின் பார்ப்மபரியாய் வரலாறு தெரியாமல் போனதன் விளைவுதான் தங்களின் பதில் . வடநாட்டு பார்ப்பனீய சக்திகள் திராவிட முன்னேற கழகத்தை உடைத்தெறிய எடுத்த முயற்சிதான் எம்ஜியாரை வருமானவரி மிரட்டல் மூலம் பிரித்தமை. அதன் பின்பு திமுக மீதும் கலைஞர் மீதும் தொடர்ந்து பொய்யனா குற்றச்சாட்டுகளை சுமத்தி எம்ஜ்யாரை ஆட்சிக்கு கொண்டுவந்தனர் .ஆரிய பார்ப்பனீய பனியா சக்திகள் .

 ஒரு கட்டத்தில் திமுகவை காப்ப்பாற்றுவதே முடியாதோ என்ற அளவில் எல்லோரும் எம்ஜியாரின் பதவி தூன்டிலை நோக்கி ஓடினர் . மறுபுறம் கலைஞர் குடும்பந்தின் மீது போலீஸ் அடக்குமுறை சிறை வாசம் என்று தொடர்ந்தனர் ஸ்டாலினை சிறையில் தள்ளி அரசியல் வாரிசாக்கியது இந்திரா காந்தி அரசுதான் . திமுகவின் எந்த வரலாறும் தெரியாமல் வெறும் நெடுமாறன சீமான் வகையறாக்கள் மூலமே தமிழக அரசியலை கற்று கொண்டு பொதுவெளியில் தவறான் கருத்தகளை வெளிய்டுவது பாமரத்தனம்

மறைநாயகன் : அண்ணா உங்களது தகவலுக்கு நன்றி.இனிவரும் காலத்தில் பதிவுகளின் போது கருத்தில் எடுக்கிறேன். சீமானை ஆதரித்து நான் எந்த இடத்திலும் காலத்திலும் கருத்திடவில்லை. 1 Like · Reply · 1h வேதநாயகம் தபேந்திரன் வேதநாயகம் தபேந்திரன் அண்ணா பதிவின் ஆரம்பத்தைத் திருத்தி விட்டேன்.



Rubasangary Veerasingam Gnanasangary r இலங்கை போராட்டத்தில் கலைஞர் விடயத்தில்கூட எவருக்கும் தெரியாத விடயங்களை நான் அறிவேன். இந்திய இராணுவம் இலங்கையில் புலிகளுக்கு எதிராக போரிட்டபோதுகூட புலிகளுக்கு சார்பாகவே கலைஞர் அவர்கள் நடந்து கொண்டார்.
இந்து பத்திரிக்கை ராம், சுப்ரமணியசுவாமி, சோ போன்றவர்களே ஒருகாலத்தில் தமிழ் ஈழப் போராட்ட ஆதரவாளர்கள்தான். இந்திய மண்ணில் அதுவும் தமிழ் நாட்டில் நடாத்தப்பட்ட பத்மநாபா குழு மற்றும் ராஜீவ் காந்தி கூட்டுக் கொலைகளே புலிகளை அந்நிய படுத்தியது. சர்க்கார் கமிசன் வழக்கில் ஜிஜி பொன்னம்பலம் பெயர் இன்றும் அடிபடக்காரணமே எனது பெரியதந்தையார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக திமுக மாநாட்டில் பங்குபற்றியதே அதன் காரணம்.
அதே போன்று இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் போதும் இருவரும் சந்தித்துக் கொண்டனர். புலிகளை இனி காப்பாற்ற முடியாது  என்று கலைஞர் முடிவெடுக்க அதுவும் ஒரு காரணம். அதன் நற்பயனை இன்று தமிழ் மக்கள் அனுபவிக்கின்றனர். இரண்டு சந்திப்புக்களுக்குமான படங்கள் உண்டு

Radha Manohar :  திமுக மாநாட்டில் தமிழ் காங்கிரஸ் சார்பாக தங்களின் பெரியபா திரு ஆனந்தசங்கரி அய்யா கலந்து கொண்டவிடய்ம் பலரும் அறியாத ஒரு விடயமாகும் .இவரி பற்றி எல்லாம் தாங்கள் விரிவாக் எழுதலாமே? அந்த பத்மநாபா கொலையில் தங்களின் அண்ணன் திரு யோகசங்கரி எம்பியும் சுட்டு கொல்லப்பட்டார் . அப்போது திமுக ஆட்சியில் இருந்தது அதன் பின் அதன் காரணமாகவே திமுக ஆட்சி கலைக்கப்பட்டது .புலிகளால் மீண்டும் மீண்டும் அதிக அளவில் பாதிக்கப்பட்டது திமுகவும் தமிழகமும் . மேலும் இவரகள் ராஜீவ் கொலையை செய்யமால் இருந்த்திருந்தால் அப்போது நடந்த பொது தேர்தலில் வி பி சிங் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்திருப்பார் இந்தியாவின் மிக சிறந்த சமூகநீதி ஆட்சியாக அது இருந்திருக்கும் .ராஜீவ் காந்தி கொலைக்கு பின்பு நடைபெற்ற தேர்தலில் அந்த அனுதாப அலையில் காங்கிரசும் அதிமுகவும் பெரிய பெரிய வெற்றியை பெற்றது . திமுகவின் வெற்றியை மட்டுமல்ல வி பி சிங் வெற்றியையும் குழி தோண்டி புதைத்தவர்கள் புலிகள் ..


Muralidharan Pb  :  மிக சிறப்பான பதில். அதோடு மட்டுமில்லாமல் புலிகள் எம்ஜிஆரை நம்பியதைப் போல கலைஞரை நம்பி வந்திருந்தால் நிச்சயமாக நல்லது நடந்திருக்கும். மதுரை ரேஸ் கோர்சில் மிகப்பெரிய கூட்டம் நடத்தி வாஜ்பாய் உள்ளிட்ட இந்தி தலைவர்கள் நிறைய பேரை அழைத்து மாநாடு நடத்தி, அதில் வந்த காசில் சிறி சபாரத்தினத்தின் குடும்பத்தினருக்கு நன்கொடை கொடுத்து, ஒரு பகுதியை மற்ற இயக்கங்களுக்கு கொடுத்து சுமார் 50000 ரூபாய் பணத்தை புலிகளுக்கு கொடுக்க நினைத்த போது, புலிகள் அந்த பணத்தை துச்சமாக மதித்து வாங்கவே இல்லை.
 ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் செய்து கொண்ட போது முன்பு புலிகளுக்கு நிதி கொடுத்த எம்ஜிஆர், புலிகளை கலந்தாலோசிக்காமல் ஒப்பந்தம் ஏன் கையெழுத்துப் போட்டுர்கள் என கூட்டணியில் இருந்த ராஜீவையும் கேட்கவில்லை.

புலிகளுக்கு ஆதரவளித்து வந்த புலிகளுக்கு பறிந்து பேசாமல் ராஜீவ்காந்தியை அழைத்து கூட்டங்களை நடத்தினார். அவர்கள் கோழை குணம் படைத்த எம்ஜிஆரை நம்பினர். இதுதான் புலிகளுக்கு அழிவின் ஆரம்பம்.
 ராஜீவ்காந்தி மரணம் இரண்டாவது பெரிய அடி.
மூன்றாவது வைகோ, திருமா போன்றவர்களின் பேச்சை நம்பி காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வராது என போரை தொடர்ந்தது பெரிய வரலாற்றுப் பிழை.
இவ்வளவு பிழைகளை செய்த விடுதலைப் புலிகள், அவரது ஆதரவாளர்களும், திமுகவை, கலைஞரை திரோகி எனப் பட்டம் கொடுப்பது இருப்பதிலேயே மாபெரும் சோகம். என்றுமே கலைஞரை கேட்டோ, கலைஞரின் பேச்சை கேட்காத புலிகளை ஆதரித்ததால் பெரும் இழப்பு புலிகளுக்கே அன்றி இன்று வரை துரோகிப் பட்டம் கலைஞருக்கு.

கருத்துகள் இல்லை: