நக்கீரன் : சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன.
இதனையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளஇந்நிலையில், இந்த கலவரம் குறித்து பேசியுள்ள ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டெரஸ், "டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் மக்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. வன்முறையைத் தவிர்க்க வேண்டும். நான் இந்தியாவின் நிலைமையைக் கவனித்து வருகிறேன். புதுடெல்லியில் நாங்கள் கேள்விப்பட்ட மரணங்கள் குறித்த செய்திகளால் மிகவும் வருந்துகிறேன்.
நான் என் வாழ்நாள் முழுவதும் மகாத்மா காந்தியின் போதனைகளால் ஆழமாக ஈர்க்கப்பட்டவன். உண்மையான சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு காந்தியின் ஆன்மா முன்னெப்போதையும் விட இன்று அதிகம் தேவைப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்க வேண்டும். அதேநேரம் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் அதைக் கொண்டுவர வேண்டும்" என தெரிவித்தார். https://www.thejakartapost.com/news/2020/02/27/erdogan-denounces-massacres-committed-against-muslims-in-india.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக