newsu.in/- Tamilselvan :
குடியுரிமை
சட்டத்திருத்தத்துக்கு எதிராக டெல்லி ஷாஹீன்பாக்கில் கடந்த 2 மாதங்களுக்கு
மேலாக பல்லாயிரக்கணக்கான பெண்கள் அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர். அதை தடுத்து நிறுத்த முடியாமல் அரசு இயந்திரம் திகைப்போய்
உள்ளது. இந்த நிலையில், வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத் அருகே
மாஜ்பூரிலும் நேற்று முந்தினம் போராட்டம் பரவியது. அங்குள்ள மெட்ரோ ரயில்
நிலையத்திலும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்றும்
தொடர்ந்து வந்தது.
இந்த சூழலில் தான் பா.ஜ.க. எம்.பி. கபில் மிஸ்ரா அப்பகுதிக்கு சென்று
போராட்டத்தை கலைந்து செல்லாவிட்டால் போலீஸ் இருக்கிறார்கள் என்று பார்க்க
மாட்டோம். உங்களை நாங்களே விரட்டுவோம்” என நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.
சுமார் 3 மணியளவில் பாஜகவை சேர்ந்தவர்கள் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக பேரணி நடத்துவதாகக் கூறி அங்கு வந்தனர். அவர்களுடன் 2 லாரிகளில் கற்களும் கொண்டு வந்து அப்பகுதியில் குவிக்கப்பட்டன. அதை காவல்துறை தடுக்கவில்லை.
அடுத்த சில நிமிடங்களிலேயே பாஜக ஆதரவாளர்கள் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கற்களை கொண்டு வீசினர். இதில் பெண்கள் உட்பட பலருக்கு மண்டை உடைந்தது.
கல்வீச்சில் ஈடுபட்ட பாஜகவினரை கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான காவல்துறை, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி இருக்கிறது.
ஆனால், பெரும்பாலான தேசிய மற்றும் தமிழ் ஊடகங்கள் கல்வீசியது, காயமடைந்தது யார்? வன்முறைக்கு காரணமானவர்களை காட்டாமல் வெறும் கல்வீச்சு, வன்முறை, தடியடி என்று மட்டுமே செய்தி வெளியிட்டு உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வந்ததை ஒட்டி அனைத்து மீடியாக்களின் கவனமும் அகமதாபாத் பக்கம் திரும்பியது. இதனை பயன்படுத்திக் கொண்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்பல் டெல்லியில் நேற்று தாக்கப்பட்ட அதே ஜாஃராபாக்கில் இன்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
கல்வீச்சு மட்டுமின்றி துப்பாக்கிச்சூடும் நடத்தியதுடன் கடைகளை தீ வைத்து எரித்து உள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு தலைமைக் காவலர் உயிரிழந்தார். அமைதியாக நடத்தப்பட்டு வந்த போராட்டம் பாஜக எம்.பி. கபில் மிஸ்ராவின் தூண்டுதலின் பேரில் கலவரமாக வெடித்துள்ளது.
பாஜக ஆதரவாளர்கள் டெல்லி கலவரத்தில் ஈடுபட்டு கடை ஒன்றுக்கு தீ வைக்கும் காட்சியை SCROLL இணையதள செய்தியாளர் விஜய்தா லல்வானி வீடியோ பதிவு செய்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக