மாலைமலர் :அகமதாபாத்:
அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது:-
இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம். பாதுகாப்பு துறையில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக உள்ளன. ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்களை இந்தியாவிற்கு தர இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளன.
இந்தியாவும், அமெரிக்காவும் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயல்படும். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்பை அமெரிக்கா ஒடுக்கி உள்ளது. நட்புடன் வந்தால் வரவேற்போம், பயங்கரவாதிகளுக்கு எங்களது எல்லை மூடப்பட்டிருக்கும்.
தெற்காசியாவில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமெரிக்கா தயாராக உள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்க அந்நாட்டு அரசுடன் இணைந்து செயல்படுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்
மின்னம்பலம் :
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தார்.
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று (பிப்ரவரி 24) காலை இந்தியா வந்த ட்ரம்ப் அகமதாபாத் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஆக்ரா சென்றார். ட்ரம்ப், மெலனியா ஆகியோரை உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். ட்ரம்பை வரவேற்க பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சிறிது நேரம் நின்று கலை நிகழ்ச்சிகளை பார்த்த ட்ரம்ப், கைதட்டி உற்சாகப்படுத்தினார்.
சரியாக 5.00 மணிக்கு தாஜ்மகாலுக்கு சென்ற ட்ரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் சுற்றிப் பார்த்தார். தாஜ்மகால் முன்பு இருவரும் ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதிகாரி ஒருவர் தாஜ்மகாலின் வரலாறு பற்றியும், ஒவ்வொரு இடத்திற்குமான சிறப்புகள் குறித்தும் அவர்களுக்கு விளக்கினார். இதேபோல இவாங்கா ட்ரம்ப், ஜாரேட் குஷனர் ஆகியோரும் தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தனர்.
தாஜ்மகால் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட ட்ரம்ப், “தாஜ்மகால் பிரமிப்பைத் தூண்டுகிறது. இந்திய கலாச்சாரத்தின் உயர்ந்த மற்றும் மாறுபட்ட அழகுக்கு காலத்தால் அழியாத சான்றாக உள்ளது. நன்றி இந்தியா” என்று எழுதியுள்ளார்.
த.எழிலரசன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக