tamil.filmibeat.com/ : சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து கிரேன் ஆபரேட்டர் அளித்துள்ள பகீர் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகைகள் காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர் ஆகியோர் நடிக்கின்றனர் இந்தப் படத்தின் காட்சிகள் சென்னை நசரத் பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு படப்பிடிப்பின் இடைவேளையின்போது மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் கீழே சாய்ந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உள்பட தொழிலாளர்கள் 3 பேர் பலியானார்கள்.
12 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் நூலிழையில் உயிர் தப்பினார்கள்.
சிபிசிஐடிக்கு மாற்றம் இந்நிலையில் தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை நசரத்பேட்டை போலீசார் கடந்த வெள்ளி கிழமை கைது செய்தனர்.
இந்தசம்பவம் குறித்து, நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் நசரத்பேட்டை போலீசார் முடிவு செய்து இருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மத்திய குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னதாக கிரேன் ஆபரேட்டர் ராஜன், போலீசாரிடம் விபத்து குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தான் பலமுறை பாரம் தாங்காது என்று கூறியும், கேமரா டிப்பார்ட்மென்ட்டில் இருந்தவர்கள் கேட்கவில்லை என கூறியிருக்கிறார்.
பெரும் அதிர்ச்சி... தான் சொன்னதை கேட்காமல், பார்த்துக்கொள்ளலாம் ஏற்றுங்கள் என்று அசிஸ்டன்ட் கேமரா மேன்கள் கூறியதால்தான் விபத்து நடந்தது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். கிரேன் ஆபரேட்டரின் இந்த பகீர் வாக்குமூலம் ஒட்டு மொத்த திரைத்துறையினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது சொன்னபோதே கேட்டிருந்தால் 3 அப்பாவி உயிர்கள் பலியாகியிருக்காது என திரைத்துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில், பல லைட்டுகள் அடங்கிய தொகுதியை கிரேனின் லேசான கூடையில் பொருத்தியதால், எடை தாங்க முடியாமல் அவரை கொத்தாக விழுந்து விட்டதாக நிபுணர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இதனிடையே இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு, தீயணைப்புத் துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெறப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக