விகடன் : வீ கே.ரமேஷ் - எம்.விஜயகுமார் :
பியூஷ்
பியூஷ் மீது புகார் கொடுத்த வீட்டின் உரிமையாளர் ஆஷா குமாரி, ”நாங்கள் கர்நாடகாவில் குடியிருந்தோம். எங்களுக்குச் சொந்தமான வீடு சேலம் ஏற்காடு அடிவாரத்தில் கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ளது. சேலத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் பியூஷ் மானஸ் என்னுடைய வீடு வாடகைக்கு வேண்டுமென்று கேட்டார். அதையடுத்து 2015ம் ஆண்டு அவரிடம் ஒரு லட்சம் முன் பணமும், மாதந்தோறும் பத்தாயிரம் வாடகையும் கொடுப்பதாக உறுதி பெற்று 11 மாத ஒப்பந்த அடிப்படையில் என் வீட்டை வாடகைக்கு விட்டேன்.
இந்நிலையில் என் கணவர் 2017 ஏப்ரலில் இறந்து விட்டார். அதன் பிறகு சொந்த வீட்டில் குடியேற முடிவெடுத்து 2018-ல் என் வீட்டை வந்து பார்த்தேன். எங்க வீட்டை ஒட்டியுள்ள மாநகராட்சி நிலத்தில் கட்டடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தார். அதைப் பார்ப்பதற்காக என் வீட்டுக்குள் நுழைந்தேன். என்னை வீட்டுக்குள் நுழையக் கூடாது என்று மிரட்டும் தொனியில் பேசினார்.
அதன் பிறகு வீட்டை காலி பண்ணச் சொல்லியும் காலி பண்ணவில்லை. காவல்துறையில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியும் காலி செய்யவில்லை. கடந்த மே மாதத்திலிருந்து 9 மாதமாக வீட்டு வாடகையும் கொடுக்கவில்லை. விதவையான என் சொத்தை அபகரிக்க நினைக்கிறார். அதையடுத்து கலெக்டரிடமும் முதல்வரிடமும் மனு கொடுத்தேன்” என்றார்.
”நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியும்
காலி செய்யவில்லை. கடந்த மே மாதத்திலிருந்து 9 மாதமாக வீட்டு வாடகையும்
கொடுக்கவில்லை. விதவையான என் சொத்தை அபகரிக்க நினைக்கிறார்”
சேலம் கன்னங்குறிச்சி ஏரியைத் தூர் வாரி அழகுபடுத்தியதில் தமிழ்நாடு
முழுவதும் அறியப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர் பியூஷ் மானஸ். இவர்
குடியிருக்கும் வாடகை வீட்டைக் காலி செய்யாமல் பிரச்னை செய்ததாகச் சொல்லி
வீட்டின் உரிமையாளர் ஆஷா குமாரி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில்
பியூஷ் மானஸ் கன்னங்குறிச்சி காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டு சேலம்
மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பியூஷ் மீது புகார் கொடுத்த வீட்டின் உரிமையாளர் ஆஷா குமாரி, ”நாங்கள் கர்நாடகாவில் குடியிருந்தோம். எங்களுக்குச் சொந்தமான வீடு சேலம் ஏற்காடு அடிவாரத்தில் கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ளது. சேலத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் பியூஷ் மானஸ் என்னுடைய வீடு வாடகைக்கு வேண்டுமென்று கேட்டார். அதையடுத்து 2015ம் ஆண்டு அவரிடம் ஒரு லட்சம் முன் பணமும், மாதந்தோறும் பத்தாயிரம் வாடகையும் கொடுப்பதாக உறுதி பெற்று 11 மாத ஒப்பந்த அடிப்படையில் என் வீட்டை வாடகைக்கு விட்டேன்.
இந்நிலையில் என் கணவர் 2017 ஏப்ரலில் இறந்து விட்டார். அதன் பிறகு சொந்த வீட்டில் குடியேற முடிவெடுத்து 2018-ல் என் வீட்டை வந்து பார்த்தேன். எங்க வீட்டை ஒட்டியுள்ள மாநகராட்சி நிலத்தில் கட்டடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தார். அதைப் பார்ப்பதற்காக என் வீட்டுக்குள் நுழைந்தேன். என்னை வீட்டுக்குள் நுழையக் கூடாது என்று மிரட்டும் தொனியில் பேசினார்.
அதன் பிறகு வீட்டை காலி பண்ணச் சொல்லியும் காலி பண்ணவில்லை. காவல்துறையில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியும் காலி செய்யவில்லை. கடந்த மே மாதத்திலிருந்து 9 மாதமாக வீட்டு வாடகையும் கொடுக்கவில்லை. விதவையான என் சொத்தை அபகரிக்க நினைக்கிறார். அதையடுத்து கலெக்டரிடமும் முதல்வரிடமும் மனு கொடுத்தேன்” என்றார்.
இதுபற்றி பியூஷ் மானஸ் மனைவி மோனிகா, ”அந்த வீட்டில் யாராலும்
குடியிருக்க முடியாது. நாங்கள் அந்த வீட்டிற்கு 4 லட்சத்திற்கு மேல் செலவு
செய்துள்ளோம். ஆஷாவின் கணவர் சிங்கிடம் தான் ஒப்பந்தம் போட்டுள்ளோம். வீடு
காலி பண்ணச் சொன்னார்கள். எங்க குழந்தைகள் 3 ஆண்டுகள் படிப்பை முடித்த
பிறகுதான் காலி பண்ண முடியும் என்று தெளிவாகச் சொன்னோம். வீட்டு வாடகை
மாதந்தோறும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் போட்டிருக்கிறோம். அதற்கான ரசீது
இருக்கிறது. காவல்துறை ஒருதலைப் பட்சமாக என் கணவரை கைது செய்து சிறையில்
அடைத்திருக்கிறது” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக