சனி, 29 பிப்ரவரி, 2020

இங்க கோயில்தான் இருந்தது.. பாதரை கூப்டுங்க" சாந்தோம் சர்ச்சுக்குள் "விசாரணை" நடத்திய அர்ஜுன்சம்பத்

அர்ஜுன் சம்பத்தின் மனைவி கிறிஸ்தவராக ( பெந்தகொஸ்தே) மாறியுள்ளது தெரிந்ததே. அந்த மன உளைச்சலில் அவர் இப்படியான் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் பலர் கூறுகிறார்கள் .
 Hemavandhana -  /tamil.oneindia.com : சென்னை: "இங்க கோயில்தானே இருந்தது. உங்க ஃபாதரை கூப்பிடுங்க.. நான் அவர்கிட்ட பேசணும்" என்று இந்து மக்கள்
கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் திடீரென சாந்தோம் சர்ச்சில் நுழைந்து கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது! 
இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக வெடித்து வருகிறது. 
சாந்தோம் சர்ச்சுக்குள் 'விசாரணை' நடத்திய அர்ஜுன்சம்பத் நாடு முழுவதும் சிஏஏ பிரச்சனை வலுத்து வருகிறது.. தமிழகமும் இந்த போராட்டத்தில் இறங்கி உள்ளது.. குறிப்பாக வண்ணாரப்பேட்டையில் 15 நாட்களாக இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் இந்த போராட்டக்களம் வன்முறையாக மாறி மோதலாக வெடித்தது.. 
இதில் 42க்கும் மேற்பட்டோடர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் நாடெங்கும் லேசான பரபரப்பு தன்மை ஒட்டிக் கொண்டுள்ளது. இந்த சமயத்தில் சென்னையில் ஒரு பரபரப்பு நடந்துள்ளது...
இந்த சர்ச்சுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் திடீரென சென்றிருக்கிறார். அங்கிருந்த தேவாலய ஊழியர்களிடம், "இங்குள்ள அருங்காட்சியகத்தை பார்க்க வேண்டும்... அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாம் கோயிலில் இருந்த பொருட்கள் என்கிறார்கள்.. அதனால் நான் பார்க்க வேண்டும்.. உங்க பாதிரியாரை கூப்பிடுங்க.. நான் அவர்கிட்ட பேச வேண்டும்"என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் ஊழியர்களோ, தேவாலய அனுமதியின்றி திறந்து காட்ட முடியாது என்று பதிலளித்துள்ளனர். 
அர்ஜூன் சம்பத் அர்ஜூன் சம்பத் இதற்கு அர்ஜுன் சம்பத், "சர்ச் இங்கே வருவதற்கு முன்பு கபாலீஸ்வரர் கோயில்தான் இருந்தது... கோயில் இருந்த இடத்திலதான் இப்போ சர்ச் இருக்கு.." என்று அர்ஜுன் சம்பத் கூறியதாகவும் தெரிகிறது.. 
ஆனால் இவர் வந்திருந்த நேரம் அருங்காட்சியகம் மூடப்பட்டு இருந்தது.. அதனால் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்... போகும்போது "நான் திரும்பவும் வருவேன்" என்றும் அர்ஜூன் சம்பத் சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார்.
அர்ஜூன் சம்பத் திடீரென சந்தோம் சர்ச்சுக்குள் நுழைந்ததும் அங்கிருந்தோர் பரபரப்பாகி விட்டனர். மேலும் சர்ச்சைக்குரிய கருத்தையும் சொல்லிவிட்டு போனது பெருத்த அதிர்ச்சியையும் அவர்களிடம் உண்டுபண்ணி உள்ளது. இது சம்பந்தமாக சர்ச் ஊழியர்கள் மயிலாப்பூர் போலீசாருக்கு வாய் மொழியாக புகார் தந்தார்களாம் .. அதன் அடிப்படையில் சர்ச்சில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
சாந்தோம் சர்ச்சுக்குப் போய் இது போல பேசியதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து இதுவரை அர்ஜூன் சம்பத் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. சாந்தோம் சர்ச்சும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. ஆனால் அவரது வருகையும், பாதிரியாரைக் கூப்பிடுங்க என்று கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: