வியாழன், 16 மே, 2019

எம்ஜியாரை மீறி பிரபாகரனால் டெலோ மீது தாக்குதல் நடத்தி இருக்க முடியாது

ஸ்ரீ சபாரத்தினம் - கலைஞர் கருணாநிதி
 ஈழப்போராட்டத்தின் தோல்வி சகோதர இயக்க படுகொலைகளில் ஆரம்பமானது.
இதில் புலிகளுக்கு துணை போனவர்கள் இந்திய மத்திய மாநில அரசுகள்தான் .
ஒரே நோக்கத்திற்காக போராட புறப்பட்டவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொலைவெறி தாக்குதல் மேற்கொண்ட பொழுது தமிழ் மக்கள் அதிர்ந்து விட்டனர்.
கலைஞரும் இதர திமுக தலைவர்களும் மட்டுமல்ல பலரும் அதை தடுக்க குரல் கொடுத்தார்கள் .
ஆனால் எவரது பேச்சையும் செவி மடுக்ககூடிய நிலையில் அன்று புலிகளும் பிரபாகரனும் இருக்கவில்லை. வெற்றிகரமாக சகோதர இயக்க தலைவரையும் ஏராளமான் போராளிகளையும் சுட்டு கொன்றார்கள் . உடல்களை டயர் போட்டு தீயிட்டார்கள் . அதை ஒரு வீர போராக
கொண்டாடினார்கள்.
அந்த கொடிய நிகழ்வினால் தமிழக மக்கள் மிகவும் கொதித்து போயிருந்தார்கள் .அவர்களின் கொபத்தை தணித்து புலிகளை புனிதர்களாக காட்டும் பொறுப்பை ஏற்ற ஜூனியர் விகடன் பத்திரிகை பிரபாகரனின் அழகான படத்தை முன் அட்டைப்படமாக போட்டு அவரது பெரிய பேட்டியை வெளியிட்டு இருந்தது.
அது முழுக்க முழுக்க புலிகளின் பிரசாரமாகவே இருந்தது.
அந்த சகோதர படுகொலைகளை தடுத்து நிறுத்த கூடிய நிலையில் இருவர் இருந்தார்கள் ஒருவர் துரதிஷ்டவசமாக தமிழகத்தின் அன்றைய முதலமைச்சர் எம் ஜி ராமாச்சந்திரன் .அடுத்தது அன்றைய இந்திய மத்திய அரசும் அதன் raw அமைப்பும்.
இந்த இருபகுதியினரும் வேண்டுகோளின்படியே இந்த சகோதர படுகொலைகள் நடந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
ஏனெனில் இது நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக பூட்டான் தலைநகரமான திம்புவில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் இயக்கங்களுக்கும் தமிழர் விடுதலை கூட்டணிக்கும் பேச்சு வார்த்தை நடந்தது .

அதில் தமிழர் தரப்பு நான்கு அம்சங்களில் விட்டு கொடுக்காமல் தங்கள்உறுதியாக நின்றன .
Thimpu Declaration
The declaration stated: It is our considered view that any meaningful solution to the Tamil national question must be based on the following four cardinal principles:
1 recognition of the Tamils of Ceylon as a nation
2 recognition of the existence of an identified homeland for the Tamils of Ceylon
3 recognition of the right of self determination of the Tamil nation
4 recognition of the right to citizenship and the fundamental rights of all Tamils of Ceylon
அந்த பேச்சு வார்த்தையில் தமிழர் தரப்பு ஓர் அணியில் நின்று விட்டு கொடுக்காமல் நடந்து கொண்டது.
அது இந்திய அதிகாரிகளை கோபமடைய செய்தது .
அந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட சத்தியேந்திரா சந்திரஹாசன் போன்றோரை உடனே நாடு கடத்தினார்கள் அப்பொழுது காரசாரமான வாக்குவாதத்தின் போது அமிர்தலிங்கம் உட்பட எல்லோரையும் you bloody fellows என்று சவுத் புளோக் சக்சேனா மரியாதை குறைவாக திட்டினார்.
அதை சத்தியேந்திரா ( மிகவும் புகழ் பெற்ற வழக்கறிஞர் குட்டி மணி தங்கதுறை போன்றோரின் வழக்குகளில் பேசுபவர்)
கடுமையாக ஆட்சேபித்தார்.
அடுத்த நாளே அந்த சந்திரஹாசனும் சத்தியேந்திராவும் நாடு கடத்தப்பட்டார்கள் . அது கலைஞர் மேற்கொண்ட கடுமையான போராட்டத்தால் கைவிடப்பட்டது நாடு கடத்தப்பட்டவர்கள் திரும்பி வந்தார்கள்.
திம்பு பேச்சு வார்த்தையில் டெலோ புலிகள் ஈரோஸ் .ஈபிஆர்எல்எப் போன்றவை (ENLF Eelam National Liberation Front) ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற பொது அமைப்பாகவே பங்கு பற்றி இருந்தனர் .
இந்த ஒற்றுமைதான் இந்தி பேரினவாதிகளின் கண்ணை உறுத்தியது.
திம்பு பேச்சுவார்த்தை July -August 1985 களில் நடைபெற்றது .
அடுத்தவருடம் May 6, 1986 இல் புலிகளால் டெலோ அழிக்கப்பட்டது அதன்தலைவர் ஸ்ரீ சபாரத்தினமும் கொல்லப்பட்டார்.
4-5-1986 அன்று மதுரையில் “கலைஞர் , நெடுமாறன் . என் டி ராமராவ் .பகுகுணா ,வாஜ்பாயி போன்ற பலரும் கலந்து கொண்ட “டெசோ” மாநாடு நடந்தது . அதில் புலிகளின் சார்பில் திலகரும் பேபி சுப்பிரமணியமும் கூட கலந்து கொண்டார்கள்
அப்பொழுது புலிகள் டெலோ மீது தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக செய்திகள் வரதொடங்கின .இந்த நிலையில்
இந்ததேதியில் மதுரையில் வைத்து அந்த மாநாட்டிற்காக வருகை தந்திருந்த வாஜ்பாய், என்.டி. ராமராவ், ராமுவாலியா போன்றவர்களின் முன்னிலையில், விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளிடம் கலைஞர் :
“நமக்குள் நாமே மோதிக்கொள்ளக்கூடாது, சகோதர யுத்தம் கூடாது, சபாரத்தினத்தைக் கொன்று விட வேண்டாம், இலங்கைத்தமிழர்களுக்காக அனைவரும் சேர்ந்துதான் பாடுபட வேண்டும்” என்று அவர்களின் கைகளைப்பிடித்துக்கொண்டு உருக்கத்தோடு கேட்டுக்கொண்டார்
மதுரை டெசோ மாநாட்டின் பந்தல்கள் கழற்றப்படும் முன்னமேயே ஈழத்தில் சகோதர படுகொலைகள் நடந்து முடிந்து விட்டது.
இதை பற்றி எம்ஜியார் எந்த காலத்திலும் வாயே திறக்கவில்லை.
அவரை பொறுத்தவரை இந்த சம்பவத்தில் அவர் ஒரு RAW ஏஜென்ட் போலத்தான் நடந்து கொண்டார்.
மேலும் பிரபாகரன் தனது கைப்புள்ளைதானே என்ற எண்ணமும் இருந்திருக்கலாம் .
இனி கருணாநிதி ஈழம் பற்றி வாயை திறக்க முடியாது என்ற மகிழ்ச்சி நிச்சயம் எம்ஜியாருக்கு இருந்திருக்கும் .
ஏனெனில் சகோதர படுகொலைகளுக்கு பின்பு அவர் பிரபாகரனை அழைத்து விருந்தும் வைத்தார் .
ஈழத்தில் புலிகளின் வெறியாட்டம் நடந்து கொண்டிருந்த பொழுது தமிழகத்தில் இருந்த டெலோ போராளிகள் எம்ஜியாரிடம் முறையிட சென்றனர் . அவர்களை உள்ளே வர அனுமதிக்க வில்லை . இன்டர்காமில் பேசும் வாய்ப்பு கிடைத்தது .நிலமைய சொன்னார்கள் அதற்கு எம்ஜியார் : உங்களிடமும் ஆயுதங்கள் இருக்கிறதுதானே? என்றார் . அத்துடன் இண்டர்காம் ஆப் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் டெலோவின் அழிவு எம்ஜியாரின் பார்வைக்கு தெரிந்தே நடந்து இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
எம்ஜியாரை மீறி பிரபாகரனால் டெலோ மீது தாக்குதல் நடத்தி இருக்க முடியாது . அப்பொழுது பிரபாகரன் தமிழ்நாட்டில்தான் இருந்தார். ....வி.நவரத்தினம்

கருத்துகள் இல்லை: