புதன், 15 மே, 2019

மலேசியா கோவில்கள் சேர்சுகள் மீது தாக்குதல் முறியடிப்பு .. கைதுகள்


கோவில்கள் தேவாலயங்களை தாக்குவதற்கு திட்டம்- மலேசியாவில் முறியடிப்புveerakesari :மலேசியாவில் இந்து ஆலயங்கள் மற்றும் கத்தோலிக்க தேவாலயங்கள் மீது மேற்கொள்ளவிருந்த தாக்குதல்களை முறியடித்துள்ள மலேசிய காவல்துறையினர் நால்வரை கைதுசெய்துள்ளனர். மலேசியாவின் முக்கிய பிரமுகர்களையும் கொலை செய்வதற்கு கைதுசெய்யப்பட்டவர்கள் திட்டமிட்டிருந்தனர் என தெரிவித்துள்ள மலேசிய காவல்துறையினர் இந்து ஆலயமொன்றின் வாகனதரிப்பிடத்தில் கடந்த வருடம் முஸ்லீம் தீயணைப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டமைக்கு பழிவாங்குவதற்காகவே தாக்குதல்களை மேற்கொள்வதற்கு கைதுசெய்யப்பட்டவர்கள் திட்டமிட்டிருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மே முதல் வாரத்தில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகளின் போது ரொகிங்யா இனத்தை சேர்ந்த இருவர் உட்பட நால்வரை கைதுசெய்துள்ளதாக மலேசியாவின் தேசிய பொலிஸ் தலைமையதிகாரி அப்துல் ஹமீத் பதூர் தெரிவித்துள்ளார்.
தீயணைப்பு படைவீரர் அடிப்பின் இறப்பிற்கு பழிவாங்குவது இவர்களின் நோக்கங்களில் ஒன்று என தெரிவித்துள்ள அவர் இதற்காக இவர்கள் முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் இலக்குவைக்கப்பட்ட முக்கிய பிரமுகர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதற்கு அந்த அதிகாரி மறுத்துள்ளார்.
தேடுதல் நடவடிக்கையின் போது உள்ளுரில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மலேசியாவை சேர்ந்த நபரே இந்த திட்டத்தின் முக்கிய சூத்திரதாரி அவர் இந்து ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பொழுதுபோக்கிற்காக மக்கள் கூடும் இடங்களையும் தாக்க திட்டமிட்டிருந்தார் என மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
20 மற்றும் 25 வயது ரொகிங்யா இனத்தவர்களை சேர்ந்தவர்களையும் கைதுசெய்துள்ளோம்,இவர்களில் ஒருவர் மியன்மார் இராணுவத்திற்கு எதிராக போராடும் அமைப்பின் ஆதரவாளர்  என தெரிவித்துள்ள  பொலிஸார் இவர்கள்மலேசியாவில் உள்ள மியன்மார் தூதரகத்தை தாக்க திட்டமிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இவர்கள் வட்ஸ்அப் மூலம் தொடர்பாடல்களை முன்னெடுத்தனர் சிரியாவில் உள்ள மலேசிய பிரஜையொருவர் இவர்களிற்கு அறிவுறுத்தல்களை வழங்கினார் எனவும்  அவர்கள் தெரிவித்துள்ள

கருத்துகள் இல்லை: