ஞாயிறு, 12 மே, 2019

விஜயகாந்த் + பிரேமலதாவும் காரிய கோமாளிகளும்

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!LR Jagadheesan :; விஜயகாந்த் கட்சியின் ”கொளுகை” என்ன என்கிற விடை தெரியாத கேள்வியைப்போலவே அவரது கட்சியில் இன்னும் இருக்கும் ஆட்களின் அரசியல் புரிதல், எதிர்பார்ப்பு என்ன என்பதும் விடை காணமுடியாத மில்லியன் டாலர் கேள்வி. அப்படியான அபூர்வ பிறவிகள் அவர்கள். இல்லாவிட்டால் பிரேமலதாவை பற்றி அவர் கணவரான விஜயகாந்த்திடமே புகார் செய்யப்போன அந்த ஆட்களை எப்படி புரிந்துகொள்வது? பின்வரும் இந்த வரிகள் தான் இதில் highlight:
“வெளியே வந்த நிர்வாகிகள், ‘நாங்க சொன்னதைக் கேட்டு கேப்டன் கண்ணுலேர்ந்து தண்ணியா ஊத்த ஆரம்பிச்சிடுச்சு’ என்று சொல்ல, அதற்கு வீட்டில் இருந்த உதவியாளர்கள், ‘அவர் கண்ணுல இருந்து எப்பவும் இப்படிதாங்க கண்ணீர் வந்துக்கிட்டே இருக்கும்,. நீங்க போங்க’ என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.”
இதை படித்ததும் பரமார்த்த குருவும் அவருக்கு வாய்த்த முட்டாள் சீடர்களும் கதை தான் நினைவுக்கு வந்தது. ஆனால் தமிழக அரசியலில் இதெல்லாம் புதிதும் அல்ல. ஜெயலலிதா பற்றி எம்ஜிஆரிடம் புகார் சொன்ன; சசிகலா பற்றி ஜெயலலிதாவிடம் புகார் சொன்ன அதிமுக தொண்டர்கள் ஆளும் மாநிலத்தில் எந்த கோமாளித்தனத்தையும் காமெடியாக மட்டும் கடந்து செல்ல முடியாது.
ஏனெனில் சுயநினைவின்றி கிடந்த முதல்வர் இட்லி சாப்பிட்டார் என்று சொன்னதை நம்பிய நாட்டில் எதுவுமே காமெடியல்ல. எல்லோருமே இங்கே காரியக்கோமாளிகள் தான்

மின்னம்பலம் : “தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பரப்புரை உள்ளிட்ட எந்த விஷயத்திலும் விஜயகாந்த் தனது உடல் நிலை காரணமாக முக்கியப் பங்கு வகிக்கவில்லை என்பது எல்லோரும் அறிந்ததுதான்.

அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையின்போது பேச முடியாத நிலையில் அமர்ந்திருந்தார் விஜயகாந்த். பிறகு தேர்தல் பரப்புரைக்கு விஜயகாந்த் வருவாரா மாட்டாரா என்று அக் கட்சியினர் காத்துக் கிடந்த நிலையில் கடைசி கட்டத்தில் சென்னையில் மட்டுமே சில மணி நேரங்கள் உலா வந்து வீட்டுக்குள் சென்று விட்டார் விஜயகாந்த். ஆக, கடந்த மக்களவைத் தேர்தல் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் தேமுதிக சார்பான அத்தனை பணிகளையும் ஒருங்கிணைத்து மேற்பார்வையிட்டது பிரேமலதாவும் அவரது சகோதரர் சுதீஷும்தான்.
தேர்தல் முடிந்த பிறகும் பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் விஜயகாந்தைச் சந்தித்து தங்கள் கருத்துக்களைச் சொல்ல ஆவலாக இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் சாலிகிராமம் வீட்டின் முன் காத்துக் கிடப்பதும் பின்பு விஜயகாந்தை சந்திக்க முடியாமல் திரும்பிவிடுவதுமே வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேமுதிக அலுவலகத்தில் நடந்த மே தினக் கொண்டாட்டத்துக்குப் பிறகு சுதீஷ் தனது குடும்பத்தோடு ஆஸ்திரேலியா டூர் கிளம்பிவிட்டார். அதன் பிறகு சில நாட்களில் பிரேமலதாவும் தனது மகன்களோடு மும்பை சென்றிருக்கிறார். இந்த தகவல்களை தேமுதிக அலுவலக ஊழியர்கள் மூலம் தெரிந்துகொண்ட சிற்சில நிர்வாகிகள், ‘அண்ணியும் சுதீஷும் இல்லாத நேரத்துல போனாதான் கேப்டனை பார்க்க முடியும்’ என கணக்குப் போட்டு ஓரிரு நாட்களுக்கு முன் சாலிகிராமம் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
வழக்கம்போல் செக்யூரிட்டிகள் கேப்டனை பார்க்க முடியாது என்று கூறவும் நிர்வாகிகள் விடாப்பிடியாக, ‘நீங்க போய் கேப்டன்கிட்ட சொல்லுங்க. அவர் பாக்க முடியாதுனு சொல்லிட்டா நாங்க போயிடுறோம்’ என்று கெஞ்சியிருக்கிறார்கள். விஜயகாந்திடம் செக்யூரிட்டிகள் சென்று சொல்ல, ’உடனே உள்ள வரச் சொல்லு’ என்று உத்தரவிட்டுள்ளார். காரணம் விஜயகாந்துக்கு கட்சிக்காரர்களைப் பார்ப்பது என்றால் அவ்வளவு ஆவல்.
அதன் பின் உள்ளே சென்று விஜயகாந்தை சந்தித்த நிர்வாகிகள் கண் கலங்கிவிட்டார்கள். விஜயகாந்துக்கு பணிவிடை செய்யும் வழக்கமான உதவியாளர்கள் தான் இருந்திருக்கிறார்கள். ‘நல்லா இருக்கீங்களா...?’ என்று கேட்ட விஜயகாந்திடம் நிர்வாகிகள் தங்கள் மனக் குமுறல்களைக் கொட்டியிருக்கிறார்கள்.
‘கேப்டன்... நீங்க பதினாலு வருஷமா இந்த கட்சியை கட்டிக் காப்பாத்தி வர்றீங்க. இந்தத் தேர்தல்ல கூட கேப்டன் ஏன் வரலைனு பல்வேறு கிராமங்கள்லயும் மக்கள் எங்களிடம் கேட்டாங்க. உங்க உடல் நலம் பழையபடி வரணும்னு பல்வேறு கிராமங்களில் பிரார்த்தனை செய்யுறாங்க. ஆனால், நீங்கள் வளர்த்தெடுத்த இந்த கட்சி இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துகிட்டிருக்கு. அதற்கு காரணம் சொன்னா, நீங்க எங்களை தவறா நினைக்க கூடாது. அண்ணி எடுக்கும் பல முடிவுகள்தான் காரணம்.
கடந்த சட்டமன்றத் தேர்தல்லயும் சரி, இந்த நாடாளுமன்றத் தேர்தல்லயும் சரி நாம அமைச்ச கூட்டணி மிக தவறானது. நிர்வாகிகளின் தொண்டர்களின் எண்ணங்களுக்கு மாறானது. ஆனா, இதையெல்லாம் நாங்க அண்ணியிடம் எடுத்துச் சொல்ல முடியலை. காரணம் ஒவ்வொரு அணியாக அவர் ஆலோசனை கூட்டம் நடத்தியபோதே நிர்வாகிகளின் கருத்துக்களுக்கு அவர் முக்கியத்துவம் அளிப்பதில்லைனு தெரிஞ்சுக்கிட்டோம். தான் எடுப்பதுதான் முடிவுன்னு கட்சியை நடத்துறாங்க. இப்படியே போனா கட்சி சீக்கிரமா காணாமப் போயிடும். அதனால நீங்க ஒரு நல்ல முடிவு எடுக்கணும்’ என்று நிர்வாகிகள் சொல்ல, ’நீங்க போங்க நான் பாத்துக்குறேன்’ என்று மெலிந்த குரலில் அவர்களிடம் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார் விஜயகாந்த் .
வெளியே வந்த நிர்வாகிகள், ‘நாங்க சொன்னதைக் கேட்டு கேப்டன் கண்ணுலேர்ந்து தண்ணியா ஊத்த ஆரம்பிச்சிடுச்சு’ என்று சொல்ல, அதற்கு வீட்டில் இருந்த உதவியாளர்கள், ‘அவர் கண்ணுல இருந்து எப்பவும் இப்படிதாங்க கண்ணீர் வந்துக்கிட்டே இருக்கும்,. நீங்க போங்க’ என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
மும்பையிலிருந்து நேற்று நள்ளிரவு சென்னை திரும்பிய பிரேமலதாவுக்கு இன்று காலை வீட்டில் உள்ள பணியாளர்கள் மூலம் இந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது. உடனே செக்யூரிட்டிகளை அழைத்து, ‘கேப்டனுக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் நிர்வாகிகளை ஏன் உள்ள விட்டீங்க’ என சத்தம் போட்டிருக்கிறார். கேப்டன்தான் உள்ளே வரச் சொன்னார் என்று அவர்கள் சொல்ல, விஜயகாந்திடமும் இதுபற்றி பேசியிருக்கிறார் பிரேமலதா. தான் இல்லாத நேரத்தில் விஜயகாந்தை வந்து சந்தித்த நிர்வாகிகள் யார் யார் என்று சிசிடிவியில் பார்க்க உத்தரவிட்டிருக்கிறார் பிரேமலதா. இதன் அடிப்படையில் நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என்பதுதான் தேமுதிக வட்டாரத்தில் உலவும் தகவல். இன்று தன்னை சந்திக்க சில விஐபிகளுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருந்தார் பிரேமலதா. ஆனால் காலையில் இருந்தே இந்த விஷயத்தில் டென்ஷன் ஆனதால் அந்த சந்திப்புகளை எல்லாம் ரத்து செய்துவிட்டார் பிரேமலதா. மேலும் மீண்டும் மும்பைக்கே புறப்பட்டுவிட்டார்” என்ற மெசேஜுக்கு செண்ட்

கருத்துகள் இல்லை: