வியாழன், 1 நவம்பர், 2018

நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி?


vcknakkheeran.in - காளிதாஸ்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் டிசம்பர் 10ஆம் தேதி திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு நடைபெறுகிறது. அதனையொட்டி சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்க்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் அறவாழி தலைமை வகித்தார்.

 இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசுகையில், சனாதனத்தையும் பயங்கரவாத சக்திகளை எதிர்த்து திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு நடைபெறுகிறது. இதில் மதசார்பற்ற அனைத்து கட்சியின்  தேசிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.  தேசிய கட்சிகளான காங்கிரசும், இடதுசாரி கட்சிகள் தேசம் காப்போம் மாநாடு நடத்தியிருக்க வேண்டும்.
ஆனால் தமிழகத்தில் பெருபான்மையாக உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசம் காப்போம் மாநாடு நடத்துகிறது.
மற்ற கட்சிகள் தேசம் காப்போம் மாநாடு நடத்துவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு நடத்துவதற்கு வித்தியாசம் உள்ளது. சனாதனத்தை எதிர்த்து தொலைநோக்கு சிந்தனையுடன் நடத்தப்படுகிற இந்த மாநாடு இந்திய தேசத்தையே திரும்பி பார்க்கும் வகையில் அமையும்.

 பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் இணைந்து மாநாட்டில் கலந்து கொள்கிறது. மோடி அரசு 182 மீட்டர் உயரத்தில் மிகப் பெரிய உயரத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைத்துள்ளது.  இது காந்தியையும் அம்பேத்கரையும் விட உயர்ந்தவராக காண்பிப்பதற்காகவே வைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் ஒரு வேளை  சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் ரூ3600 கோடி செலவில் சிலை வைத்ததற்கு கண்டனம் தெரிவித்தார். வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக எடுக்கும் நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கட்டுபடும் என்றார்.

அதேபோல் நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவதாக தெரிவித்தார். இவருடன் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார். கடலூர் தொகுதி பாரளுமன்ற செயலாளர் தாமரைசெல்வன், சிதம்பரம் தொகுதி செயலாளர் செல்லப்பன் செய்திதொடர்பாளர் திருவரசு விவசாய அணிதலைவர் பசுமைவளவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

கருத்துகள் இல்லை: