ஞாயிறு, 28 அக்டோபர், 2018

துக்ளக் பத்திரிகையை பறிக்க குருமூர்த்தி முயற்சி... மோடிக்கு துக்ளக் தேவையாம் .. லேடிகளை மிரட்டும் கேடி

குருமூர்த்தி : “நான் யாருன்னு உங்களுக்கே தெரியும். மோடிக்கு தமிழ்ல ஒரு பத்திரிகை வேணும். கையெழுத்து போடலன்னா, நாளைக்கே வருமான வரித்துறை உங்க வீட்டுக்கு வரும் ! 
மோகன் ராஜ் : துக்ளக் குடும்பத்தை மிரட்டும் குருமூர்த்தி!
“துக்ளக் பத்திரிகையை தனது மனைவி மீனாட்சி பெயருக்கு எழுதிக்கொடுக்கும்படி மிரட்டுகிறார் ஆடிட்டர் குருமூர்த்தி” என்று சோ குடும்பத்தினர் மத்தியில் தொடர் குற்றச்சாட்டாக வெடித்துக்கொண்டிருக்கிறது.
சோவின் மறைவுக்குப்பிறகு துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்ட சோவின் நண்பரும் ஆடிட்டருமான குருமூர்த்தி மிரட்டுகிறாரா? என்று சோ குடும்பத்தினரிமே விசாரித்தோம், “சோ இறந்தவுடன் திடீரென்று அடியாட்களுடன் வந்த ஆடிட்டர் குருமூர்த்தி, சோவுக்கு எனது மனைவி மீனாட்சி மூலம் கொடுத்த 8 ½ கோடி ரூபாய்க்கு ஈடாக துக்ளக் பத்திரிகையை எழுதிக்கொடுத்துவிடுங்கள் என்று மிரட்ட ஆரம்பித்தார். அதற்கு, சோவின் மனைவி செளந்தரா ராமசாமியோ,
“நாச்சிகேட்டஸ் பப்ளிஷர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டேட் என்கிற பெயரில் பதிவு செய்யப்பட்ட துக்ளக் பத்திரிகைக்கு நான், எனது மகள் சிந்துஜா, மகன் ஸ்ரீராம் ஆகியோர்தான் உரிமையாளர்கள். கணவர் இறந்ததும் எங்கள் அனுமதி இல்லாம நீங்களாகவே வந்து பத்திரிகையை கைப்பற்றிக்கிட்டீங்க. இதுவரைக்கும், துக்ளக்கின் வரவு செலவு கணக்குகளை எங்களிடமே காண்பிக்க மறுக்கிறீங்க. இப்போ, திடீர்ன்னு உங்க மனைவி மீனாட்சி பேருக்கு பத்திரிகையை எழுதிக்கொடுக்கணும்னு சொல்றீங்க. என்ன நியாயம் இது?’ என் கணவர் பத்திரிகையை விற்பதாக போட்ட ஒப்பந்தம் ஏதாவது இருக்கா?” என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு குருமூர்த்தி, “நான் யாருன்னு உங்களுக்கே தெரியும். மோடிக்கு தமிழ்ல ஒரு பத்திரிகை வேணும். கையெழுத்து போடலன்னா, நாளைக்கே வருமான வரித்துறை உங்க வீட்டுக்கு வரும்” என்று மிரட்டிவிட்டு செல்கிறார். சொன்னபடியே வருமான வரித்துறையும் ரெய்டு நடத்தியதால் சோவின் குடும்பம் மிரண்டுபோயிருக்கிறது.
பிரபல பத்திரிகையை கைப்பற்றியதுபோல துக்ளக்கையும் கைப்பற்றப்பார்த்தார் அந்த பத்திரிகை அதிபர். அதற்குக்குத்தான், மீனாட்சி குருமூர்த்திமூலம் 8 ½ கோடி ரூபாயை சோவுக்கு கொடுத்தார். ஆனால், பணம் கொடுத்ததற்கான முறையான டாக்குமெண்ட் இல்லாததால் அந்த அதிபரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்நிலையில், துக்ளக்கை கைப்பற்றி தருகி்றேன் என்று பா.ஜ.க. பொன் ராதாகிருஷ்ணனிடம் கோடிகளை வாங்கிய குருமூர்த்தி, சோவின் குடும்பத்தை நெருக்கிக்கொண்டிருக்கிறார்கள். மீனாட்சி குருமூர்த்திக்கு 8 ½ கோடி ரூபாய் ஏது? வாய் மொழி ஒப்பந்தத்தில் அவருக்கு கொடுத்துவிட்டு பத்திரிகையை எழுதிக்கேட்டால் எப்படி கொடுக்கமுடியும்? என்று சட்டப்போராட்டாத்தில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறது சோவின் குடும்பம்.

கருத்துகள் இல்லை: