
tamil.filmibeat.com: Rajendra Prasath:
சென்னை:
திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுவதற்கு முன்னதாகவே சர்கார் படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்படத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கால், இப்படம் திட்டமிட்ட தேதியில் ரிலீசாகுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, சர்கார் படத்திற்கு தமிழ் ராக்கர்ஸ் வாயிலாக புதிய பிரச்சினை ஒன்று முளைத்துள்ளது.
இந்த தளத்தை தடை செய்ய பல முயற்சிகள் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடந்தாலும், அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை.
சமீபகாலமாக முக்கிய நடிகர்களின் படங்களை ரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டி வருகிறது தமிழ் ராக்கர்ஸ். அப்படியாக சில படங்களையும் அவர்கள் வெளியிட்டனர்.
எச்.டி. பிரிண்ட்: இந்நிலையில், சர்கார் படத்திற்கும் அதே போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம். அதாவது,
நவம்பர் 6ம் தேதி திரைக்கு வரும் முன்பே சர்கார் படத்தை முதல் நாளே வெளியிடுவோம் என சவால் விட்டுள்ளனர். அதுவும் எச்.டி. பிரிண்டில் படம் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் டிவீட்டில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் பலரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக