வெள்ளி, 11 மே, 2018

அவுரங்கபாத் .. வியாபாரி தற்கொலை .. தவறான மின்சார கட்டணம் எட்டு லட்சம்.. உண்மையில் ஆயிரம் ரூபாய்தான்

cur
வெப்துனியா : 2018 காய்கறி வியாபாரி ஒருவருக்கு 8 லட்சம் கரண்ட் பில் வந்ததால், அவர் தூக்க்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் ஜெகநாத் ஷெல்கி (36) என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். இவருடைய கடையின் கரண்ட் பில் இம்மாதம் 8 லட்சம், என்ற தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து மின்சார அலுவலகத்திற்கு என்ற அவர், தனக்கு வழக்கமாக 1000 ரூபாய் தான் கரண்ட் பில் வரும், ஆனால் இப்பொழுது கரண்ட் பில் 8 லட்சம் வந்திருக்கிறது என்றார்.
அங்கிருந்த அதிகாரி, இதனைப்பற்றி முழுமையாக விசாரிக்காமல், அந்த தொகையை கட்டும்படி கூறிவிட்டார். hang இதனால் மனமுடைந்த ஜெகநாத் ஷெல்கி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஷெல்கி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், 2000 ரூபாய் வந்த கரண்ட் பில்லை மின்சாரத் துறை ஊழியர் 8 லட்சம் ரூபாய் என தவறுதலாக குறித்துள்ளார். இதனையடுத்து போலீசார் சம்பத்தப்பட்ட ஊழியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: