வெள்ளி, 11 மே, 2018

காலா ..மேலே கருப்பு - கீழே காவி,, பா.இரஞ்சித் - இரஜினியின் போலி முற்போக்கு..

தமிழ் மறவன் : மேலே கருப்பு - கீழே காவி!
பா.இரஞ்சித் - இரஜினியின் போலி முற்போக்கு..,
"காலா"வில் கருப்புச்சட்டையை இரஜினி அணிந்திருப்பதாய் தோழர்கள் யாரும் மகிழ்ந்துவிட வேண்டாம்.
அப்படியும் இந்துத்வா இச்சட்டை குறித்து கேள்வி கேட்டுவிடக் கூடாதென்றே தன் வேட்டியை காவி நிறத்தில் கட்டியிருக்கிறார் இரஜினி!
சாதிவெறியை கண்டித்து பாடல்கள் வெளிவந்ததை ஆஹா..ஓஹோ வென புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
திராவிட இயக்க கலை,இலக்கிய வளர்ச்சியில் வராத பாடல்களா?
MGRன் நடிப்பில், பட்டுக்கோட்டையாரின் பாடல்களுக்கு ஈடாகுமா?
பட்டுக்கோட்டையாரின் பாடல்களும், கலைஞரின் வசனங்களும் அநீதியை அடையாளம் காட்டின. சாதிய கட்டமைப்பை உருவாக்கிய பார்ப்பனீயத்தோடு நேராக சமர் புரிந்தன. இவர்களின் கலை, இலக்கிய போராட்டத்தில் தந்தை பெரியாரின் தத்துவ அரசியல் வியாபித்திருந்தது.
அப்படி..
அண்ணலின் தத்துவ அரசியலை முன்னெடுப்பதாககூட பா.இரஞ்சித் சொல்ல இயலாது. பார்ப்பனீய ஆதிக்க வெறியை ஒருக்காலும் அம்பலப்படுத்த துணியாத இரஞ்சித் புரட்சியாளரின் வழியை பின்பற்றுபவர் அல்ல!
விஜயகாந்த்கூட உழைப்பாளர்களுக்கான பாடலில் உணர்ச்சிப் பொங்க நடித்திருப்பார். ஆனாலும் அவரின் அரசியல் வேறுதானே?
அநீதிகளை எதிர்ப்பதென்பது மிகச் சுலபமான ஹீரோயிசம்.!
அநீதிகளை (பார்ப்பனிய,இந்துத்வாவை) ஒழிக்க களமாடுவதே உண்மையான போராளிகளின் பண்பு..!
அநீதிகளை (பார்ப்பனிய,இந்துத்வாவை) மக்களுக்கு அம்பலப்படுத்திக் காட்டுவது தத்துவ அரசியல்..!

இப்போ விசயத்துக்கு வருகிறேன்...
பா.இரஞ்சித்
ஆதிக்க சாதிவெறியை எதிர்கிறார்.!
சாதிஒழிப்பிற்காக களமாடுகிறாரா?
(ஆதிக்கசாதி எதிர்ப்பு என்பது சாதி ஒழிப்புக் களமல்ல)
சாதியை கட்டமைத்துப் பாதுகாக்கிற இந்துத்வா, பார்ப்பனீயத்தை என்றாவது தன் தோழமைகளுக்கு அடையாளம் காட்டினாரா?
இல்லை..இல்லை.., இல்லவேயில்லை.
இங்கே பா.இரஞ்சித்தோ, இரஜினியோ நட(டி)த்திக் கொண்டிருப்பது மிகச் சுலபமான, ஒன்றுக்கும் உதவாத ஹீரோயிச அரசியல்.
இவர்களின் ஆதிக்கத்திற்க்கு எதிரான சப்தம் உண்மையில் போராடும் போராளிகளின் குரலை சமூகத்திலிருந்து அழுத்திவிடும்.
வடமாநிலங்களிலும், தென்மாநிலங்கள் பலவற்றிலும் அம்பேத்கரை சுவீகரித்து செறித்துவிட துடிக்கும் பார்ப்பனீயத்தின் வேலை தமிழகத்தில், பெரியார் மண்ணில் செல்லுபடியாகவில்லை.
எனவே..,
இம்மண்ணில் தலித்துகளை குறி வைத்து காய் நகர்த்தும் பார்ப்பனீயத்திற்க்கு பலியாவதும், வெறும் ஆதிக்கசாதி வெறியை கண்டிப்பதும், பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்தாமல் கடந்து போவதும், திராவிடக் கோட்பாட்டை தலித்தியத்திற்க்கு எதிரான கருத்தாக நிறுவ முயல்வதும், சாதி ஒழிப்பை பேச மறுப்பதும், சாதி எதிர்ப்பை மட்டுமே பேசி இளைஞர்களை தத்துவ அரசியலின் பக்கம் சாயாமல் பாதுகாப்பதும் பார்ப்பனீயம் தலித்தியத்தை உட்செறித்துக் கொள்ள உதவுமேயன்றி இப்படிப்பட்ட இரசிக மனோபாவம் ஒருக்காலும் தலித்திய விடுதலைக்கு உதவாது என்பதே உண்மை.
தோழர்களே! எச்சரிக்கை!!
- மு.தமிழ் மறவன்.மேலே கருப்பு - கீழே காவி!

- மு.தமிழ் மறவன்.

கருத்துகள் இல்லை: