வெள்ளி, 11 மே, 2018

ஈரோட்டில் கி மு 300 ஆண்டுகளுக்கு முந்தய வணிக முத்திரை ,தங்கம் செம்பு ஆபரணங்கள் கருவிகள் ....

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்?மின்னம்பலம்: கீழடியில் மட்டுமல்ல; இன்னும் பல இடங்களில் தொல் தமிழர்களின் அடையாளங்கள் இருக்கின்றன. அவர்கள் வாழ்ந்த ஒவ்வோர் இடமும் அவ்வளவு செல்வங்களைக் கொண்டுள்ளது. ஏற்காடு அருகே 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆநிரைகளைக் காத்த வீரனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது, திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்கெனவே மகேந்திரப் பல்லவனின் பல்லவ கிரந்த எழுத்துகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது கி.பி 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இன்னும் இதுபோல பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த வரிசையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கொடுமணல் பகுதியும் இணைந்துள்ளது. கி.மு 500 ஆண்டுகளுக்கு முன்பாகப் பயன்படுத்தப்பட்ட வணிக முத்திரைகள், தங்கம், செம்பு, ஆபரணங்கள் கற்காலக் கருவிகள், நான்கு ஈமக்குழிகள், இரும்பு ஆலைகள், பழங்கால மக்கள் பயன்படுத்திவந்த மண்பாண்டங்கள், அணிகலன்கள், முதுமக்கள் தாழிகள் என்று எண்ணற்ற சான்றுகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளன. மேலும், இந்த நகரமானது கரூர் மாவட்டம் முசிறி மற்றும் பட்டினம் நகரத்தை இணைக்கும் வியாபாரத் தலமாக விளங்கியதற்கான சான்றுகளும் இருப்பதாக அகழ்வாராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம். இன்று நாம் வரைபடத்தில் வரைந்து கோடுகளால் பிரித்த தமிழகத்தைச் சொல்லவில்லை. தமிழ் பேசிய மனிதர்கள் வாழ்ந்த இடத்தைச் சொல்கிறேன். அவர்கள் வாழ்ந்த இடங்களே அவர்களின் அறிவையும் தொழில்நுட்பத்தையும் உலகுக்கு எடுத்துரைக்கும் மையங்கள். அவ்வாறான இடங்களைக் காக்க வேண்டியதும், அந்த மனிதர்களின் பெருமைகளை உலகுக்கு எடுத்துரைப்பதும் தமிழ் பேசும் நிலத்தில் உண்டு வாழும் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய நன்றிக்கடன்.
ஓர் இனத்தின் மரபுதான் அவ்வினத்தின் ஆதாரம். அப்படிப்பட்ட ஆதாரங்களை அழிப்பதும் மறைப்பதும், அவ்வினத்தவரை அகதிகள் ஆக்கும் முயற்சி. அப்படிப்பட்ட ஆதாரங்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று நாம் எடுக்கும் நடவடிக்கைகள் யாவும் தொடர்ந்து தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதை நேரடியாக அனுபவித்த களம்தான் கீழடி அகழாய்வு நிலம்.

அதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் எழுத்தாளர் சு.வெங்கடேசன், ‘வைகை நதி நாகரிகம்’ எனும் புத்தகத்தில் அகழாய்வு குறித்த அனைத்துத் தகவல்களையும் அவற்றை அழிக்க நினைக்கும் அரசியலையும் தெளிவாக முன்வைத்திருக்கிறார். அதைப் படிக்கும்போது, நமது மரபின் அடையாளங்களைச் சிதைக்கும் நடவடிக்கைகளை நாம் வேடிக்கை மட்டுமே பார்ப்பதா எனும் உணர்வு எழும்.
கீழடியில் மட்டுமல்ல; இன்னும் பல இடங்களில் தொல் தமிழர்களின் அடையாளங்கள் இருக்கின்றன. அவர்கள் வாழ்ந்த ஒவ்வோர் இடமும் அவ்வளவு செல்வங்களைக் கொண்டுள்ளது. ஏற்காடு அருகே 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆநிரைகளைக் காத்த வீரனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது, திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்கெனவே மகேந்திரப் பல்லவனின் பல்லவ கிரந்த எழுத்துகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது கி.பி 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் இதுபோல பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அந்த வரிசையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கொடுமணல் பகுதியும் இணைந்துள்ளது. கி.மு 500 ஆண்டுகளுக்கு முன்பாகப் பயன்படுத்தப்பட்ட வணிக முத்திரைகள், தங்கம், செம்பு, ஆபரணங்கள் கற்காலக் கருவிகள், நான்கு ஈமக்குழிகள், இரும்பு ஆலைகள், பழங்கால மக்கள் பயன்படுத்திவந்த மண்பாண்டங்கள், அணிகலன்கள், முதுமக்கள் தாழிகள் என்று எண்ணற்ற சான்றுகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளன. மேலும், இந்த நகரமானது கரூர் மாவட்டம் முசிறி மற்றும் பட்டினம் நகரத்தை இணைக்கும் வியாபாரத் தலமாக விளங்கியதற்கான சான்றுகளும் இருப்பதாக அகழ்வாராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.
நரேஷ்

கருத்துகள் இல்லை: