பெரிய அளவுக்கு கிளிக் |
சாமி எம்புள்ளைய படிக்க அனுப்ப?'
"உன் புள்ளைய படிக்க அனுப்பு. அந்த பிள்ளைக்கான சாப்பாட்டை நான் தரேன்" - தமிழக அரசு அரை நூற்றாண்டுக்கு முன்பு
'என் புள்ள பள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டு போக நல்ல துணி இல்லைங்க'
"புள்ளைய படிக்க அனுப்பு. சீருடையை நான் தரேன்"
'என் புள்ள கால்ல செருப்பு இல்லாம வெயில்லயும், மழையிலயும் நடக்குது'
"புள்ளைய படிக்க அனுப்பு. செருப்பு நான் தரேன்"
'பள்ளிக்கூடத்துல வெறும் சோறும் குழம்பும்தானாம். அத திண்ணுட்டு எப்படிங்க என் புள்ள தெம்பா படிக்கும்?'
"இனி சத்துணவுல முட்டை போட சொல்றேன். சந்தோஷமா?"
'புத்தகத்தை காசு கொடுத்து வெளியில வாங்க சொல்றாங்க சார். என்னால அதெல்லாம் முடியுமா?'
"உன் பிள்ளைக்கு புத்தகம், ஜியாமெண்டரி பாக்ஸ் எல்லாமும் இலவசமா தரேன். படிக்க மட்டும் அனுப்பு"
'எம்புள்ள அஞ்சாப்பு வரை எங்கூர்லயே படிச்சிடுச்சிங்க. அடுத்து ஆறாப்பு படிக்க பக்கத்து ஊருக்கு போனும். அது இங்கேர்ந்து 4-5 மைல் தூரம் இருக்கும். தினமும் பஸ்ல போக காசுக்கு நான் எங்க போவேன்'
"உன் பிள்ளைக்கு இலவச பஸ் பாஸ் நான் தரேன். படிக்க அனுப்பு"
'பக்கத்து ஊர்ல என் புள்ள படிக்குது. அந்த ஊருக்கு அடிக்கடி பஸ் இல்லை. எப்படி அனுப்புறது?'
"கவலைப்படாதீங்க. உங்க பிள்ளைக்கு இலவசமா சைக்கிள் தரோம். படிக்க அனுப்புங்க"
'நாங்க மலைக்கிராமங்க. எங்க ஊர்லேர்ந்து தினமும் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கிறது சாத்தியமில்லைங்க'
"உங்களை மாதிரி மக்களுக்குதான் அரசாங்கம் சார்பில் உண்டு உறைவிட பள்ளிகளை கட்டியிருக்கோம். பிள்ளையை படிக்க அனுப்புங்க. தங்குற இடம், சாப்பாடு, படிப்பு அனைத்துக்கும் நாங்க பொறுப்பு"
'வயசுக்கு வந்த பொம்பள புள்ளைய எப்படி அந்த மூனு நாளுக்கு பள்ளிக்கூடம் அனுப்புறது? அதான் அந்த நாட்கள்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறதில்லை'
"தைரியமா அனுப்புங்க. அந்த நாட்களுக்கு தேவைப்படும் நாப்கின்களை கொடுக்க தானியங்கி நாப்கின் மிஷின்களை பள்ளிக்கூடத்தில் அமைச்சிருக்கோம். அதுக்காகல்லாம் புள்ளைய லீவ் போட சொல்லாதீங்க"
'பத்தாவதுவரை அரசாங்க பள்ளிக்கூடத்தில் படிக்க வச்சிட்டேன். ஏதோ கம்பியூட்டர் படிப்பு வந்துருக்காம்ல அதுல சேர்த்து விடலாம்னு பார்க்குறேன். எங்க போயி சேர்க்குறதுன்னு தெரியலையே?!'
"எங்கிக்கிட்ட அனுப்புங்க. Computer Science படிப்பை நாங்களே சொல்லித்தரோம். படிக்கிற புள்ளைக்கு உதவியா இருக்க இலவசமா லேப்டாப்பும் தரோம்"
'என் புள்ளைதாங்க என் வம்சத்துலயே பள்ளிக்கூடம்வரை போய் படிச்சவன். அவனை காலேஜ் படிப்புக்கு அனுப்ப பணத்துக்கு நான் எங்க போவேன்?
"குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு கல்லூரி படிப்பும் இலவசம். தயங்காம படிக்க அனுப்பி வைங்க.நாங்க பார்த்துக்குறோம்"
'எம் புள்ள நல்லா படிச்சி டாக்டர்படிப்புக்கோ, என்ஜினியர் படிப்புக்கோ போகனும்னா எங்க போயி படிக்கனும்?'
"நம்ம பிள்ளைகள் எங்கேயும் போக வேணாம். அவுங்க டாக்டராகவோ, பொறியாளராகவோ ஆகனும்னா நம்ம மாநிலத்துலயே படிக்கலாம். அதுக்கு தேவையான மருத்துவ கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகளையும் நம்ம அரசு கட்டித்தரும். அதுக்கு 12வதுல நல்ல மார்க் எடுத்தா போதும்"
'பொம்பளப்புள்ள 8வதுவரை படிச்சிருக்கு. அது போதும்னு பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திட்டோம். சட்டுபுட்டுனு அடுத்த தை மாசத்துல கல்யாணத்தை முடிச்சிடுவோம்'
"பெண் பிள்ளைகளை முழுமையா படிக்க விடுங்க. 12ம் வகுப்புவரை படித்தால் திருமணத்துக்கு 50,000 ரூபாய் பணமும் தாலிக்கு 8 கிராம் தங்க காசும் அரசாங்கம் சார்பா தரோம். படிக்க அனுப்புங்க"
'நீங்க நல்லாயிருக்கனும் சாமி. என் வம்சத்துலயே என் புள்ளதான் முதல் பட்டதாரி. இனி குடும்பம் தழைச்சிடும்'
திடீரென ஒரு வில்லன் வரான் " இனி நீங்கல்லாம் எனக்கு கட்டுப்படனும். நான் சொல்றபடிதான் நீங்கல்லாம் படிக்கனும்.
நீ என்ன தேர்வு எழுதனும்னு நான்தான் சொல்லுவேன். அதே மாதிரி இந்த கல்லூரிகள் எல்லாம் உனக்கு சொந்தமா இருக்கலாம் ஆனா அதில் யார் யாரை படிக்க வைக்கனும்னு நான்தான் முடிவெடுப்பேன். ஒரே நாடு, ஒரே கொள்கை. இனி இப்படித்தான். இதை ஏற்று நீங்க நடக்கலைனா நீங்கல்லாம் தேச துரோகி. அடுத்து என்ன பாடம் சொல்லிக்கொடுக்கனும்னு நான்தான் சொல்லப்போறேன்"
இதுதான் அரை நூற்றாண்டுகளாக தமிழக அரசுகளின் உழைப்பால் கிடைத்த கல்வி எனும் சமூகநீதி , காவி பாவிகளின் கையில் சிக்கிய வரலாறு.
-Nambikai Raj
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக