ஞாயிறு, 10 டிசம்பர், 2017

சமண . பௌத்த சிலைகளுக்கு நாமம் போட்ட பார்பனர்களின் மோசடி வரலாறு!

Poornima Mythreyan : பெரிய நாமம் போட்டு விட்டான்...என்றும்
ஒரேயடியாக பட்டை அடித்து விட்டான் என்றும்
தனது பொருளை வேறொருவன்ஏமாற்றி பறித்து அவனதை உரிமை கொண்டாடும் போது சொல்லப்படுவது நம்மூர் பழக்கம் ..அது ஏன் தெரியுமா???   பார்ப்பான் ஏதாவது ஒரு புத்த கோயிலையோ சமண கோயிலையோ உரிமை கொண்டாடி கருவரை கட்டி இந்துக்களை சீரழித்து ஏமாற்ற நினைத்தால் முதலில் அங்குள்ள சிலைகளுக்கு நாம்ம் போடுவான்..
அடுத்து அவனுக்கு உரிமையாகி விடும்..
திரிப்பதியும், மொட்டையும் மற்றும் நெற்றி முப்பட்டையும் பௌத்தக் குறியீடுகள்.
திரி என்பது திரி ரத்னம், திரி பிடகம் ஆகியவற்றை முன்னிறுத்தும் எண்ணியல் குறியாகும். பதி எனும் சொல் தலைவரை/நாயகரை குறிக்கும் சொல்லாகும். இச்சொற்களின் இணைப்பில்(திரி+பதி)திரிப்பதி எனும் சொல் உருவாகிறது. திரிப்பதி எனும் இச்சொல்லுக்கு புத்தர் என்பதே வெளிப்படையான விளக்கமாகும். இதுவே பார்ப்பனியத்தின் பௌத்த அடையாள மறைப்புத் திட்டத்தின்படி திருப்பதி என்று திரிக்கப்பட்டது.


திரிபதியாம் புத்தரின் போதனைகள் போதிக்கப்பட்ட புத்த விகாரே திரிப்பதிக் கோயிலாகும். அக்கோயில் நிறுவப்பட்ட மலையே திரிப்பதி மலையாகும்.
திரிப்பதி மலைக்கு வேங்கடம் என்கிற பெயரும் உண்டு. மூங்கில் காடு, மதயானைகள் திரியும் காடு என வேறு அர்த்தங்களை 'வேங்கடம்' எனும் சொல் கொடுத்தாலும், பௌத்தம் தொடர்பான புரிதலிலும் வேங்கடம் என்பது பௌத்த குறியீடாக விளங்குகிறது.


வேம் என்பது பாவம்/குற்றம் என்கிற ஒரு அர்த்தத்தையும் கொடுக்கிறது. கடம் என்பது கடந்து செல்லுதலை குறிக்கிறது. பாவ காரியங்களை கடந்து, நற்பாதையை நாடும் வழியைக் காட்டும் பௌத்த நெறியை போதிக்கும் இடமென, வேங்கடம் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
திரிப்பதி என்றால் நினைவுக்கு வருவது மழித்தல் எனும் மொட்டையாகும். தலை மழித்தல் என்பது பௌத்தத்தில் ஞான வழிக்குச் செல்லுவதற்கான அடையாளமாகும். அவ்வாறே அன்றைய சமூகம், திரிப்பதி மலை சென்று, பௌத்த அறவோர்களிடம் தம்ம போதனைப் பெற்று ஞானப் பாதையில் நடைபோடத் துவங்கியதையே, நமக்குத் 'திரிப்பதி மொட்டை' உணர்த்துகிறது.
முப்பட்டை எனும் நெற்றி நாமத்திற்கும் திரிப்பதிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்கிற கேள்வியும் நமக்கு எழச்செய்யும். அதற்கும் பௌத்த விளக்கத்தை நம்மால் பெற முடிகிறது.
புத்தம், தம்மம், சங்கம் ஆகிய மூன்று சரணங்களும் மூன்று ரத்தினங்களாக அதாவது 'திரி ரத்னம்' என்று பௌத்தர்களால் அழைக்கப்பட்டன.
திரி ரத்னத்தை மூன்று முனைகள் கொண்ட வடிவமாக, கி.மு.மூன்றாம் நூற்றாண்டு காலத்தில், மத்திய பிரதேசத்தில் பௌத்தப் பேரரரசர் அசோகரால் அமைக்கப்பட்ட சாஞ்சி தூபியில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இதுவே பிறகு 'திரி சூலம்' வடிவமும் பெற்றது. இவ்வடிவமே புத்தரின் நெற்றியில் முப்பட்டை நாமமாக இடப்பட்டது. பிறகு, அதைக் கைப்பற்றிய வைணவம் நாமத்தை வைணவ அடையாளமாக திரித்திருக்கிறது.
நாமம் என்பதற்கு 'நடு(middle)' என்கிற அர்த்தமும் வருகிது. பௌத்தத்தின் நடுவு பாதையையும் நாமம் குறிப்பிடுகிறது. இந்துமதம் தமதாக்கிக்கொண்ட ஒற்றை நாமமும் நடுவுபாதை அடையாளத்திலிருந்தே வந்ததாகும்.
பௌத்தர்களை ஏமாற்றி நாமத்தைப் போட்டுக் கொண்ட, வைணவ இந்துக்களை குறிப்பிடவே, பூர்வ பௌத்தர்கள் 'பட்டை போட்டு ஏமாற்றினான்' என்கிற வசைச் சொல்லை மொழிந்திருக்கலாம்.

கருத்துகள் இல்லை: