திங்கள், 11 டிசம்பர், 2017

ஆர் கே நகரில் 40 ஆயிரம் கள்ள ஓட்டுக்களால் வெற்றி பெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா .

Sowmian Vaidyanathan : ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக லயோலா முன்னால் மாணவர்கள் எடுத்து வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக வெற்றி பெரும் என்ற ஒரே ஒரு கணிப்பைத் தவிர வேறு எதையுமே புத்தியுள்ளவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
கருத்து கணிப்பு இருக்கட்டும்... அதற்கு முன்னதாக கருத்துக் கணக்கு அத்தொகுதியைப் பொறுத்தவரை என்னவென்று பார்ப்போம்..!
கடந்த 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது, அதாவது ஒன்னரை ஆண்டுக்கு முன்பாக அங்கு நடைபெற்ற தேர்தலில் அங்கே அதிமுக சார்பில் மிகப்பலம் பொறுந்திய வேட்பாளராக ஜெயலலிதா களம் கண்ட பொழுது...
பதிவான வாக்குகளில் (சற்றேரக்குறைய 1 லட்சத்தி 70 ஆயிரம்)
ஜெயலலிதா 58 சொச்சம் சதவிகித வாக்குகளையும்...
திமுகவின் சிம்லா முத்துச்சோழன் 35 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளனர்...!
இருவருக்கும் இடையிலான வித்தியாசம் கிட்டத்தட்ட 24 சதவிகிதம்.
ஆனால் அப்பொழுது திமுக சார்பாக மிகப்பலமான குற்றச்சாட்டாக அத் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு அவர்கள் அதிமுகவுக்கு ஆதவாக வாக்களிப்பது போல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள்ளது என்பது தான்..!

அதே குற்றச்சாட்டுடன் திமுக நீதிமன்ற படிகளில் ஏறி இறங்கி... இறுதியாக நீதிமன்றங்களும் தேர்தல் ஆணையத்தின் தலையில் நங்கென்று குட்டி... அந்த 45 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்து.... அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையமும், திமுக சுட்டிக்காட்டிய அந்த 40 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்கிவிட்ட பிறகு தான் இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது...!!!
அந்த 40 ஆயிரம் வாக்குகள் என்பது கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கும் திமுகவுக்கும் இடையேயான வித்தியாசமான அந்த 24 சதவிகித வாக்குகள் தான்..!
2011 -16இல் திமுக ஆட்சியில் இல்லாத நிலையில் அந்த கள்ள வாக்குகளை திமுகவால் சேர்த்திருக்கவே முடியாது... ஆட்சியில் அல்லது பதவியில் இருப்பவர்களால் மட்டுமே அது சாத்தியப்பட்டிருக்கும். அப்படியிருக்க அந்த போலி வாக்காளர்களுகாக விழுத்த வாக்குகள் யாரால் யாருக்கு விழுந்திருக்கும் என்பதை குருவி மூளை கொண்டவர்களால் கூட எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்...!
ஆக திமுகவுக்கு எதிராக விழுந்த அந்த 40 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்ட நிலையில் தான் இன்று இந்த இடைத்தேர்தல் அங்கு நடைபெறுகின்றது. ஆக இன்றைய நிலையில் பழைய நிலப்பாட்டின்படி பார்த்தாலே திமுகவும் அதிமுகவும் மிகச் சரியான வாக்கு வங்கியுடன்... அதாவது தலா 35 சதவிகித வாக்குகளோடு தான் களத்தில் நிற்கின்றன...!
ஆனால் லயோலா கருத்துக்கணிப்பின் படி திமுக வெறும் 33 சதவிகித வாக்குகளையே பெறும் என்பதை என்னால் வெறும் கருத்துத் திணிப்பாகவே பார்க்க முடிகிறது.
மேலும் தினகரனுக்கு 28 சதவிகிதமும், அதிமுகவுக்கு 26 சதவிகிதமும் என்பதைக் கூட்டினால் 54 சதவிகிதம் வருகிறது. ஆனால் 24 சதவிகித போலி வாக்காளர்களுடன் ஜெயலலிதா வாங்கியதே 58 சதவிகிதம் தான் என்கிற பொழுது.... இன்றைக்கு அந்த 24 அதிமுகவுக்கு ஆதரவாக விழுந்த போலி வாக்குகள் நீக்கப்பட்ட நிலையில் அதே சதவிகிதம் சிந்தாமல் சிதறாமல் எப்படி அதிமுகவின் இரு அணிகளுக்கும் கிடைக்கும்?!
ஆக அந்த கருத்துக்கணிப்பின் அடிப்படையே தவறு..!
மேலும் திமுகவின் வாக்கு வங்கி கடந்த ஒன்னரை ஆண்டுகளில் மிகக் கணிசமாக உயர்ந்திருக்கின்ற நிலையில்.... ஏற்கனவே 35 சதவிகித வாக்கு வங்கியை அங்கு வாங்கி நிரூபித்திருக்கின்ற நிலையில்.... நடப்பு அதிமுக ஆட்சியாளர்கள் மீதும், சசிகலா தரப்பினர் மீதும் மக்கள் மிகக் கடும் கோபத்தில் இருக்கின்ற நிலையில்....
திமுக தனது கடந்த தேர்தலில் அந்த தொகுதில் பலம்மிக்க வேட்பாளரை எதிர்த்து வாங்கிய வாக்குகளை விட.... 24 சதவிகித போலி வாக்காளர்ளின் அதிமுக ஆதரவு வாக்குகளை கழித்த நிலையில்... எப்படிப்பார்த்தாலும் மிக மிகக் குறைவாக 5 சதவிகித வாக்குகளை கூடுதலாகப் பெற்றாலே கூட....
40 ஆயிரம் போலி வாக்காளர்களை கழித்த நிலையில் பதிவாகின்ற வாக்குகளில் 50 சதவிகித வாக்குகளை திமுகழகம் பெற்று அமோக வெற்றி பெரும்..!
இது தான் யதார்த்தம்..!

கருத்துகள் இல்லை: