வியாழன், 14 டிசம்பர், 2017

BBC: குஜராத் இமாச்சல பிரதேச வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புக்கள்

இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் குஜராத் தேர்தல் இன்று நிறைவடைந்தது. குஜராத் மற்றும் இம்மாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை வரும் திங்கள் கிழமையன்று நடக்கவுள்ளது.
இந்நிலையில் சில நிறுவனங்கள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. அவற்றை பிபிசி தமிழ் வாசகர்களுக்காக தொகுத்துத் தருகிறோம்.
குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. அங்கே ஆட்சி அமைக்க மெஜாரிட்டிக்குத் தேவையான சீட் 92.
1. டைம்ஸ் நவ் விஎம்ஆர் நடத்திய கணிப்பு முடிவுகள்.
பாஜக 109 காங்கிரஸ் 70
2. இந்தியா டுடே நடத்திய கணிப்பு முடிவுகள்.
பாஜக 99-113 காங்கிரஸ் 68-82
3. இந்தியா நியூஸ் - சி என் எக்ஸ்
பாஜக 110 -120 காங்கிரஸ் 65 -75
4. ரிபப்ளிக் டிவி - சி வோட்டர் நடத்திய கணிப்பு முடிவுகள்.
பாஜக 108 காங்கிரஸ் 74
5. ஏபிபி - சிடிஎஸ் நடத்திய கணிப்பு முடிவுகள்.
பாஜக 117 காங்கிரஸ் 64
குஜராத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 115 இடங்களை வென்று ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் 61 இடங்களை வென்றது. வாக்கெடுப்புக்கு பிந்தைய கணிப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு சாதகமாகவே உள்ளன.இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. அங்கே ஆட்சி அமைக்க மெஜாரிட்டிக்குத் தேவையான இடங்கள் 34.

இந்தியா டுடே நடத்திய கணிப்பு முடிவுகள்.
பாஜக - 47 - 55
காங்கிரஸ் - 13 - 20
நியூஸ் 24 சாணக்யா நடத்திய கணிப்பு முடிவுகள்.
பாஜக - 55
காங்கிரஸ் - 13
இந்தியா நியூஸ் - சிஎன் எக்ஸ் நடத்திய கணிப்பு முடிவுகள்.
பாஜக - 42 - 50
காங்கிரஸ் - 18 -24
இமாச்சல பிரதேசத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 36 இடங்களையும், பாஜக 27 இடங்களையும் வென்றன. அங்கே ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்த வாக்கெடுப்புக்கு பிந்தைய கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: