திங்கள், 11 டிசம்பர், 2017

மோடி 'மரணவியாபாரி.. ஹிட்லருக்காவது தனது குடிகள் மற்றும் தேசத்தின் மீது பற்று இருந்தது.

Sankar Ganesh : மலேசியாவில் விமானம் காணாமல் போகிறது. உடனடியாக மலேசிய பிரதாமர் நாட்டு மக்களூக்கு உரையாற்றுகிறார். மலேசிய அரசு தனது முழு பலத்துடன் சுமார் 905 கோடியில் விமானத்தை தேடுகிறது. கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்து விமான பயணிகளின் உறவினர்களூக்கு தேடுதல் முயற்சியின் ஒவ்வொரு கட்டங்களூம் விளக்கப்படுகிறது. சீனா, வியட்நாம், ஆஸ்திரேலியா நாடுகளிடம் உதவி கோரப்படுகிறது. 2 கப்பல்கள் மற்றும் 75 ஹெலிகாப்டர்களை சீனா அனுப்புகிறது. இருந்தும் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதால் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட விமான பயணிகளை் காப்பாற்ற முடியவில்லை.
ஆனால் இந்தியாவில் ஆயிரக்கணகான மீனவர்கள் புயலில் காணாமல் போனபின்பும் பிரதமர் மொளனம் காக்கிறார்.
குஜராத்தில் கோவில் வேண்டுமா? மசூதி வேண்டுமா? என அபத்தமாக பேசி கொண்டிருக்கிறார். குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் சதி இருப்பதாக புளூகிக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தான், தன் நாட்டு தேர்தலில் தலையிடும் வரை பார்ப்பதற்கு ஒரு பிரதமர் தேவையா? நியாயமாக மோடி ராஜினாமா அல்லவா செய்யவேண்டும்?
அந்த ஹிட்லருக்காவது தனது ஜெர்மானிய குடிகள் மற்றும் தேசத்தின் மீது ஏதோ ஓர் வகையில் பற்று இருந்தது. இந்த மனிதருக்கு நம் மீது அந்த பற்று கூட இல்லையே?


இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் மிக மிக மோசமான பிரதமர் இவர்!
சோனியா காந்தி அம்மையார் மோடியை 'மரணவியாபாரி' என்று விமர்சித்தது எத்தனை பொருத்தமான வார்த்தை!
ஒருவேளை காணாமல் போயிருக்கும் அத்தனை மீனவர்களூம் உயிரிழக்கும் வரை காத்திருக்க போகிறார்களோ? என்னவோ!

கருத்துகள் இல்லை: