வெள்ளி, 15 டிசம்பர், 2017

பாமக ஊழல்புகாரில் எடப்பாடி மீது ஆளுநர் நடவடிக்கையா?

1 லட்சத்து 12 ஆயிரம் கோடி கிரானைட் ஊழல், பல்கலை கட்டுமான ஊழல், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் ஆசிரியர்கள் நியமன ஊழல், தனியார் பள்ளிகள் முறைகேடு ஊழல், பணி நியமனம் மற்றும் பணியிட மாற்றல் ஊழல், 52 ஆயிரம் கோடி தனியார் மின் கொள்முதல் ஊழல், 303 கோடி ரூபாய் மருத்துவ காப்பீட்டு திட்ட ஊழல், 39 கோடி ரூபாய் குட்கா ஊழல், வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல், பொதுப்பணித்துறையின் 1000 கோடி தார் கொள்முதல் ஊழல், சேகர் ரெட்டியிடம் அமைச்சர்கள் பெற்ற 300 கோடி கையூட்டு ஊழல், 2000 கோடி கேபிள் தொலைக்காட்சி ஊழல், அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு மற்றும் உறுப்பினர்கள் நியமன ஊழல், தொழில்துறை ஊழல், வேளாண்துறை பவர்டில்லர் ஊழல், 25 ஆயிரம் கோடி சி.எம்.டி.ஏ. கட்டிட அனுமதி ஊழல், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஊழல் என எடப்பாடி அரசின் முக்கியத்துறைகள் சார்ந்த 24 ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநர் பன்வாரிலாலிடம் முன்வைத்திருக்கிறார் அன்புமணி

பா.ம.க.வின் சந்திப்புக்குப்பிறகு ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் விசாரித்தபோது, ’பா.ம.க. கொடுத்த ஊழல் பட்டியலை, கூடுதல் தலைமைச்செயலாளரான ராஜகோபால் துணையுடன் ஆராய்ந்தார் ஆளுநர். புள்ளிவிவரங்களுடனும் ஆதாரங்களுடனும் கொடுக்கப்பட்ட ஊழல்களை அண்டர்-லைன் செய்து வைத்துக்கொண்டார். முழுமையாக படித்து முடித்ததும், "அதிகாரிகளின் துணையில்லாமலோ, அவர்களின் யோசனையில்லாமலோ அரசியல்வாதிகளால் ஊழல் செய்ய முடியாது. அதனால், அரசியல்வாதிகளோடு அதிகாரிகளையும் தண்டிக்கும்போதுதான் நிர்வாகம் சுத்தமாகும்" என ராஜகோபாலிடம் பகிர்ந்துகொண்ட ஆளுநர் புரோஹித், இந்த ஊழல்கள் குறித்து அரசிடம் விளக்கம் கேட்கும் கோப்புகளை தயாரிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்.>(மேலும் விவரமாக இன்றைய நக்கீரனில்)இரா.இளையசெல்வன்

கருத்துகள் இல்லை: